பணப்புழக்கத்தை அதிகரிக்க ரூ.10,000 கோடியை உட்செலுத்த திட்டம்!!! ரிசர்வ் வங்கி...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரூ.10,000 கோடியை உட்செலுத்த திட்டம்!!! ரிசர்வ் வங்கி...
மும்பை: வர்த்தக சந்தையில் நிலவும் கடுமையான பணப்புழக்கத்தை எதிர்கொள்ள, ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமையன்று ரூபாய் 10,000 கோடியை வரி முன்பண வரவுகளுக்கு சற்று முன்னதாகவே உட்செலுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

"டிசம்பர் மாத மத்தியில் வரி முன்பண செலுத்துகைகளையொட்டி பணப் புழக்கம் நெருக்கடியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஆர்பிஐ இந்த கூடுதல் நிதியை 14-நாட்கள் கால அவகாச வங்கி வட்டிகளின் அடிப்படையில் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் தரவுள்ளதாக ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் நிதி பரிமாற்றங்கள் சரியான முறையில் நடக்கத் தேவையான அளவு நிதியை உறுதிசெய்ய பணப்புழக்க சூழ்நிலைகளை மிகவும் கூர்ந்து கவனித்து வருவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதற்குத் தக்கவகையில் 14-நாள் அவகாச வங்கி வட்டி ஏலம் டிசம்பர் 13 ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாதவும் அதனையடுத்து அறிவிக்கப்பட்ட தொகையான ரூ.10,000 கோடிக்கு மேல் உட்செலுத்தப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்தது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் புது டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, பணப்புழக்கத்தை அதிகரிக்க குறிப்பாக அரசின் சந்தை முதலீடுகளில் அதிகரிக்க ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தெரிவித்தார்.

"வரும் வாரங்களில், மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், அதில் வட்டி விகித திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அரசு முதலீட்டு துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக பத்து வருட கடன் பத்திரங்கள் மட்டுமல்லாது அனைத்து பத்திர சந்தைகளிலும் புழக்கத்தை அதிகரிக்கவும், நிறுவனக்கடன் சந்தைகளை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்": என்று ஆர்பிஐ கவர்னர் ராகுராம் ராஜன் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI to infuse Rs. 10,000 crore on Friday to ease liquidity

The Reserve Bank said it will infuse an additional Rs. 10,000 crore into the system on Friday to ease the tight liquidity situation, ahead of commencement of advance tax payments.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X