சரிவில் தத்தளிக்கும் தங்க நகை ஏற்றுமதி!!! கவலையில் ஏற்றுமதியாளர்கள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி கெடுபிடியான விதிமுறைகள் விதித்து வரும் தற்போதைய நிலையிலிருந்து இத்துறை மீட்சியடைவதற்கான எவ்வித சாத்தியமும் தென்படாத சூழலில், நவம்பர் மாதத்திலும் கீழ்நோக்கிய சரிவையே சந்தித்துள்ளன.

நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தின் போது இந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி 476.1 மில்லியன் அமெரிக்க டாலராக சரிவடைந்து கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் போது இது 693.62 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என கோல்டு ஜுவல்லரி எக்ஸ்போர்ட் ப்ரொமோஷன் கவுன்சில் (GJEPC) ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சரிவில் தத்தளிக்கும் தங்க நகை ஏற்றுமதி!!! கவலையில் ஏற்றுமதியாளர்கள்..

2014 மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடையும் நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், இந்தியாவின் தங்க நகை ஏற்றுமதிகள் 52.7 சதவீதம் என்ற விகிதத்தில் இருந்து மிகவும் 4.46 பில்லியன் அமெரிக்க டாலராக சரிவடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் தங்க இறக்குமதிகளைக் குறைக்க முனைந்தது நிதி அமைச்சகம், இதனையடுத்து அரசாங்கம் தங்க இறக்குமதியின் மீது சுமார் 10 சதவீத இறக்குமதி வரியை விதித்தது முதல் தங்க நகை ஏற்றுமதிகள் பெரும் சரிவையே சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் எண்ணெய்க்கு அடுத்ததாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருளாக தங்கம் உள்ளது. தங்க இறக்குமதிகளில் 20 சதவீதம் வரை நகைகளாக மாற்றப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றொரு நிபந்தனையையும் அதிகாரிகள் விதித்துள்ளனர்.

உலகளாவிய தங்க விலைகளின் சரிவு, தங்க நகைக்கான கிராக்கியை அதிகப்படுத்தியிருந்தாலும் கூட, மூலப்பொருள் பெறுவதில் இருக்கக்கூடிய தடைகள், சுங்க இலாகாவிடமிருந்து தடைநீக்கம் பெறுவதற்கு ஆகக்கூடிய நேரம் மற்றும் அதில் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் போன்றவையே தங்க நகை இறக்குமதிகள் இத்தகைய பெரும் சரிவை சந்திப்பதற்கான காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் தற்போது நடப்பு கணக்கு பற்றாக்குறை சரியான நிலைக்கு வந்ததை தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's gold jewellery exports continue downward journey

India's gold jewellery exports continued their downward slide in November as exporters continued to be hampered by restrictions with officials seeing little chance of a recovery in the industry in the near-term.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X