இந்திய நிறுவனங்களின் லாப நிலை குறைந்து!!! பொருளாதார நெருக்கடியின் எதிரொலி...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்தியா இன்க் வெளியிட்ட அறிக்கையில் "பெருகி வரும் கடன் சுமைகள் மற்றும் தளர்ந்து வரும் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்திய நிறுவனங்கள் தங்களுடைய லாப நிலையை பராமரிக்க திணறி வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.

மொத்த முதலீட்டில் திரும்ப கிடைத்த அளவு (Return on Total Capital) - நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீட்டில் திரும்பப் பெறுவதில் எவ்வளவு இலாபம் உள்ளது என்று அளவிடும் முதன்மையான இந்த அளவீட்டின் படி, இந்திய நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளாக, தொடர்ந்து மோசமான நிலையே அடைந்துள்ளது. 2007-08-ம் ஆண்டில் 29 சதவிகிதமாக இருந்த இந்த அளவு, 2013-ம் நிதியாண்டில் 20.5 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று, மும்பை பங்கு சந்தையில் உள்ள 200 நிறுவனங்களில் 142 நிறுவனங்களை (வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நீங்கலாக) கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்திய நிறுவனங்களின் லாப நிலை குறைந்து!!! பொருளாதார நெருக்கடியின் எதிரொலி...

நிறுவனங்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களை எவ்வளவு திறமையுடன் பயன்படுத்துகின்றன என்பதை அறிய திரும்ப கிடைத்த முதலீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவு (Return on Capital Employed - RoCE) என்பதே சரியான அளவீடாக இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒரு நிறுவனம் தொடர்ந்து பெருமளவு கடன் வாங்கிக் கொண்டிருந்தாலோ அல்லது இலாபத்தை உயர்த்த தவறினாலோ இந்த சதவிகிதம் அதிகரிக்கும்.

'நிறுவனங்களின் தரத்தை அளவிடுவதில் RoCE மிகவும் ஏற்றதாகவும், சிக்கலான அளவீடாகும். இதில் எல்லா விதமான நிறுவனங்களையும் கணக்கில் கொள்வதற்கு, நாங்கள் இந்த அளவீட்டையே பெரிதும் பயன்படுத்துகிறோம்' என்று ஆம்பிட் கேபிடல் (Ambit Captial) நிறுவனத்தின் நிறுவன பங்குகள் பிரிவின் தலைமை இயக்குநரான சௌராப் முகர்ஜி கூறுகிறார்.

பொருளாதார சுழற்சி (Economic Cycle) மேல்நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருந்ததால், 2009-ம் ஆண்டு வரையிலும் இந்திய நிறுவனங்கள் அதிக அளவிலான மூலதனத்தை திரும்ப பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால், 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வளர்ச்சியில் தடை ஏற்பட்டு, மெதுவாக குறையத் தொடங்கியது.

எனினும், இந்த சரிவினால் மிகவும் பெரிய அளவில் பங்கம் வரவில்லை என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு மூன்று அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் பொருளாதார சுழற்சியில் சாதாரணமாக ஏற்படும் மாற்றம் தான் இது என்கிறார் அவர்.

விரிவாக்கப் பணிகள், தேவையற்ற நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் போனற்வற்றில் திரும்ப வந்த லாபங்களை இந்திய நிறுவனங்கள் மிகவும் ஆக்ரோஷமாக செலவிட்டு அவற்றை அழித்து வருவது தனக்கு கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 'தேவையற்ற நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் (Mergers & Acquisitions) போன்றவற்றையும் மற்றும் முதலீட்டைக் கொண்டு தேவையற்ற வகையில் விரிவாக்கம் செய்தும் இந்திய நிறுவனங்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வருவது எனக்கு மிகவும் கவலையைத் தருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரம் எந்த நிலையில் இருந்தாலும், சில நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டை திரும்ப பெறுவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. குறைந்த அளவு கடன் அல்லது கடனே இல்லாத நிறுவனங்களின் இலாபம் அதிகரிக்கவும் மற்றும் அதிக அளவு மூலதனமும் திரும்பக் கிடைத்து வருகிறது. உதாரணமாக, கேஸ்ட்ரால் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது முதலீட்டில் 104.3 சதவீதம் லாபமாக பெற்றுள்ளது. டைட்டன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் லாபம் 59.4 சதவீதமாக உள்ளது.

மதிப்பை உருவாக்குவதில் இந்த சதவீதம் மிகவும் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "அதிக அளவிலான முதலீட்டை திரும்ப பெற்றும் மற்றும் மதிக்கத்தக்க இலாபமும் கொண்டுள்ள நிறுவனங்கள் தலைசிறந்த மதிப்பு மிக்க நிறுனங்களாக உள்ளன" என்று ASK குழுமத்தின் செயல் இயக்குநர் பாராத் ஷா கூறுகிறார்.

தங்களுடைய மூலதனத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெற்று வரும் இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 89 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும், 15 முதல் 30 சதவீதம் வரை மூலதனத்தை திரும்ப பெற்றுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு 38 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Inc profitability at five-year low

Indian companies are struggling to maintain their profitability as rising debt levels and slackening growth begin to take a toll.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X