27% உபரி லாபம் அடையும் வகையில் டிசிஎஸ் நிறுவனம் செயல்படும்!!! என்.சந்திரசேகரன்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அரசு குடியேற்ற சட்ட விதிகளை கடுமையாக்க உள்ள போதும், இந்திய ரூபாயின் மதிப்பு மிகுந்த ஏற்றத்தாழ்வை சந்தித்துக் கொண்டுள்ளபோதும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மார்ச் மாத்துடன் முடியும் இந்த நிதி ஆண்டிற்கு பிறகு மிக சிறப்பாக இருக்கும் என டிசிஎஸ் நிறுவனம் கூறுகிறது.

 

இந்தியாவின் மிகப்பெரும் மென்பொருள் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்.சந்திரசேகரன் இதுகுறித்து பேசுகையில் "2013 ஆம் நிதி ஆண்டு நன்றாக இருந்தது, மேலும் தற்போது உள்ள சூழ்நிலைகளை பொறுத்து அடுத்து வரும் நிதி ஆண்டும் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார்." வரும் ஆண்டிலுள்ள சவால்களை பொறுத்தவரை நாங்கள் அமெரிக்க குடிபெயர்வு மசோதாவினையும் பண மதிப்பு மாற்றங்களையும் நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

 
தொழில்நுட்ப துறையில் உலகின் இரண்டாம் நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுக்கிறது!!!

அமெரிக்க காங்கிரஸின் மூலம் கொண்டுவரப்படும் குடியேற்ற மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டால் அது சுமார் 45,600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வர்த்தகத் துறையை மிகவும் பாதிக்கும். பரிசீலனையில் உள்ள வர்த்தக நிறுவனங்களால் பாரபட்சமானதும் தொழில் செய்ய தடையாகவும் கருத்தப்படும் இந்த மசோதா, விசா மூலம் பணிபுரியும் பணியாளர்களை வரும் ஓரிரு ஆண்டுகளுக்குள் கணிசமாக குறைக்க வலியுறுத்தும். இது இந்திய பணியாளர்கள் அதிகம் பணிபுரியும் இந்திய நிறுவனங்கள் அந்த நாட்டிலுள்ள மக்களை பணியிலமர்த்த நிர்பந்திக்கும்.

இது குறித்து சந்திரசேகரன் மேலும் தெரிவிக்கையில், "டிஜிட்டல் ஃபைவ் ஃபோர்சஸ்" (Digital five forces) எனப்படும் மொபிலிட்டி (நகர்வு தொலைத்தொடர்பு சேவைகள்), கிளவுட், சோசியல் மீடியா (சமூக தளங்கள்) மற்றும் விவர ஆய்வுகள் (டேட்டா அனாலிடிக்ஸ்) போன்ற சேவைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார். சந்தைகள் ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி கருத்துப்படி இந்த புதிய தொழில்நுட்பங்கள் உலகளாவிய தொழிநுட்ப செலவுகளை 2014 ஆம் ஆண்டில் 5 விழுக்காடு அளவிற்கு அதாவாது சுமார் 1.26 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பங்கள் மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் 1.4 விழுக்காடு அளவிற்கு விடுபட்ட டிசிஎஸ்-இன் வளர்ச்சியை பணியாட்கள் அதிகரிப்பின் மூலமாக ஊக்குவிக்குமா என்ற கேள்விக்கு அவர் "வர்த்தகம் எப்போதுமே முழுமையாக சமன் அற்ற வளர்ச்சியை கொண்டிருக்காது" என்றார்.

சந்திரசேகரன் மேலும் பேசுகையில், டிசிஎஸ் வரும் காலங்களில் 27 சதவிகித உபரி லாபத்தை பெரும் வகையில் செயல்படும் என்றார். எனினும் 2014 ஆம் ஆண்டில் வரவிருக்கும் தேர்தலையொட்டி இந்திய வர்த்தகம் சற்று மெதுவாக நடக்கும் என அந்நிறுவனம் எதிர்நோக்குகிறது.

அந்நிறுவனம் இந்த வருடத்தில் இதுவரை 50,000 பேரை பணியமர்த்தியுள்ளது. மேலும் பணியமர்த்தும் வேலைகளை திட்டமிட்டபடி தொடரும். 2.8 லட்சம் பணியாளர்களுடன் இந்தியாவின் மிகப்பெரும் தனியார் நிறுவனமாகவும், உலக அளவில் ஐபிஎம் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்குகிறது.

"அனைத்து பகுதிகளிலும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் தேவை வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என சந்திரசேகரன் வரவிருக்கும் ஆண்டினைப்பற்றி குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS to keep close watch on US Migration Bill: N Chandrasekaran

Tata Consultancy Services expects the next financial year to be better than the one that ends in March 2014, even as it remains cautious about immigration reforms being legislated in United States, its largest market, and a volatile rupee.​
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X