நிதி பற்றாக்குறையை குறைக்க புதிய வழி!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதி பற்றாக்குறையை குறைக்க புதிய வழி!
மும்பை: ஆய்வு மற்றும் மதிப்பீட்டு நிறுவனமாக கிரிஸில் செய்துள்ள மதீப்பீடுகள் படி முன்னிலையில் உள்ள 20 அரசு நிறுவனங்கள் வைத்துள்ள பண இருப்புகளைக் கொண்டு வருவாய் 20,000 கோடி ரூபாயை கொண்டு இந்தியாவின் நிதி பற்றாக்குறையை குறைக்க இயலும் என்று கூறுகிறது.

அரசு நிறுவனங்கள் பங்காதாயதிற்கு முந்தைய பண இருப்புகலாக சுமார் 1,60,000 கோடி ரூபாய் வரை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அரசு நிறுவனங்கள் தங்களுடைய முதலீடு செலவு திட்டங்களை பாதிக்காத வண்ணம் தனி பங்காதயங்களைத் தவிர சுமார் 27,000 கோடி மதிப்புள்ள சிறப்புப் பங்காதாயங்களை சுலபமாக வழங்க முடியும்.

 

இந்த அறிக்கை பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், பாரத் பெட்ரோலியம் கார்பொரேஷன், கோல் இந்தியா, கண்டெய்னர் கார்பொரேஷன், எஞ்சினிர்யஸ் இந்தியா , கெயில், எம்எம்டிசி, எம்ஓஐஎல், நால்கோ நெய்வேலி நிலக்கரி நிறுவனம்,என்.ஹெச்.பி.சி, என்எம்டிசி , என்டிபிசி, ஆயில் இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம், பவர் கிரிட் கார்பொரேஷன், ஷிப்பிங் கார்பொரேஷன், எஸ்ஜேவிஎன்எல் மற்றும் செயில் ஆகிய நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டது.

 

கிரிஸில் அமைப்பின் தலைவர் முகேஷ் அகர்வால் தெரிவிக்கையில், "இது போன்ற தருணங்களில், அரசு நிறுவனங்களின் பண இருப்பு மாற்று வருவாய் மூலமாக அமையும். எனினும் அரசு இந்த பண இருப்புகளை சிறப்புப் பங்காதாயங்களாக பெற இந்த நிறுவனங்களை எந்த அளவிற்கு சம்மதிக்க வைக்கும் என்பதைப் பொறுத்து அமையும்" என்றார்.

இந்த 20 அரசு நிறுவனங்களின் மொத்த பண இருப்பு 2013 ஆண்டு மார்ச் மாதம் முடிய சுமார் 1,70,000 கோடியாக இருந்தது. இது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்காதயத்திற்கு முந்தைய நிதியாக சுமார் 1,60,000 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும்.

கிரிஸில் விவரங்கள் படி நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்காத வண்ணம் தங்கள் பண இருப்பில் 40 சதவிகிதம் வரை பங்காதாயமாக வழங்கலாம்.

இந்நிறுவனங்கள் கடந்த ஆண்டு அளித்த பங்காதாயமான 37,000 கோடியை ஒப்பிடுகையில், 27,000 கோடி ரூபாய் அதிகம். எனவே அரசுக்குக் வழங்கப்படும் இந்த அதிக தொகை இந்த 27000 கோடியில் ரூபாய் 20000 கோடி அளவிற்கு இருக்கும்.

இந்த அதிக பங்காதாயத் தொகைகளை சேர்க்காமல், வருவாய் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 விழுக்காடாக இருக்கும் என கிரிஸில் தெரிவித்துள்ளது.

இந்த 20000 கோடி அதிக வருவாய், பற்றாக்குறையில் தோராயமாக 20 அடிப்படை புள்ளிகள் வரை இருப்பதோடு, அரசு நிர்ணயித்திருந்த பற்றாக்குறை அளவான 4.8 சதவிகிதத்தை அடைய உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PSU cash reserves can cut fiscal deficit by Rs 20,000 cr: CRISIL

Mumbai-based research and ratings agency, CRISIL has estimated the government can cut its fiscal deficit by Rs 20,000 crore in the current financial year by using cash reserves of top 20 public sector undertakings (PSUs).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X