வங்கிகள் காப்பீட்டு தரகர்களாக செயல்பட நிதி அமைச்சகம் கோரிக்கை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நிதி அமைச்சகம் பொதுத்துறை வங்கிகளை ஜனவரி 15 முதல் காப்பீட்டு தரகர்களாக செயல்பட வலியுறுத்தியுள்ளது. அத்திட்டத்தை வங்கிகள் துணைக் குழுமங்களை கொண்டு அதிகளவில் பரவும் படி செயல்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில், "காப்பீட்டு ஊடுருவல் அதிகரிக்கவும் காப்பீட்டு பொருட்களை தவறாக விற்பதை தவிர்க்கவும் தனியாக துணைக் குழுமம் தேவைப்படுகிறது" என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வங்கிகள் காப்பீட்டு தரகர்களாக செயல்பட நிதி அமைச்சகம் கோரிக்கை!!

வங்கிகள் இனி காப்பீட்டு தரகர்களாக செயல்படும் என்று 2013-14 நிதியாண்டு பட்ஜெட்டில், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இதன்படி செயல்படுவதால் வங்கிகளின் ஒட்டுமொத்த பிணையத்தையும் பயன்படுத்தி காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். இதனால் தொலைதூர கிராமத்தில் இருந்து கூட காப்பீட்டை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்.

தற்போது இவ்வகை வங்கிகளில் ஒரு ஆயுட் காப்பீடு நிறுவனம், ஒரு ஆயுட் காப்பீடு அல்லாத நிறுவனம் மற்றும் ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்கப்படும். தனியார் வங்கிகள், பல காப்பீட்டு நிறுவனத்தின் பொருட்களை விற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அவர்களுக்கு செலாவணி விகிதத் சமநிலை வழங்கப்படும்.

வராத கடன் தொகை அதிகமாக இருத்தல், குறைவான முதலீடு மற்றும் நஷ்டங்களை கொண்டுள்ள வங்கிகள் காப்பீட்டு தரககத்தை துவங்க முடியாது. சரி வகிதத்தில் செயல்படாத கடன்கள் 3 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் வங்கிகள் பல நிறுவனத்தின் பொருட்களை விற்க முடியாது என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, அலாஹாபாத் பேங்க் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு வருவாய் வரும் ஒரு மூலம் நீக்கப்பட்டுள்ளது.

பிற நிறுவனங்களின் காப்பீட்டு பொருட்களை வங்கிகள் விற்பதை பேங்கஷூரன்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த பேங்கஷூரன்சிற்கான இறுதியான நெறிமுறைகளை, காப்பீட்டு ஒழுங்காக்கி இந்த வருட ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ளார். விதிமுறைகளின் படி, பேங்கஷூரன்ஸ் நிறுவனங்கள் எந்த ஒரு தனி வாடிக்கையாளர்களிடமும் 50 சதவீதத்திற்கு மேல் வணிகத்தில் ஈடுபட கூடாது.

ப்ரோமோடர் வங்கிகளிடம் செய்யப்படும் வணிகம் 25 சதவீதத்தை தாண்டக்கூடாது. ஆயுட் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகளின் பரவல் பிணையத்துக்காக அதிகளவில் ப்ரீமியம் செலுத்தியுள்ளதால், இதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். PNB மெட்லைஃப் மற்றும் SBI-IAG ஜெனரல் காப்பீடு போன்றவைகளை இதற்கு உதாரணங்களாக சொல்லலாம்.

காப்பீடு பொருட்களை விற்பதற்கு துணைக் குழுமத்தை நியமித்து, காப்பீடு நிறுவனங்களோடு தனி நிலையாக செய்து கொண்டுள்ள ஏற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வங்கிகள் அஞ்சுகின்றனர். அதே போல் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதும் கடினமானதாக இருக்கும். இந்த நிதியாண்டின் முதல் பாதியில் தன்னுடைய புதிய வணிக வருமானம் 6.58 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்று ஆயுட் காப்பீடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதே போல் பொது காப்பீட்டு நிறுவனங்கள் 14 சதவீத அளவில் தன் தொழிலை பெருக்கியுள்ளது. தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் 2012-13 நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாயில் 40 சதவீதம் பேங்கஷூரன்ஸின் பங்கீடாகும். இது சென்ற வருடம் 25 சதவீதமாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Public sector banks set to become insurance brokers

The finance ministry on Monday directed public sector banks to act as insurance brokers beginning January 15 by floating a subsidiary to increase their distribution network.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X