என்ஆர்ஐ-களின் இ-மெயில் நிதி ட்ரான்ஸாக்ஷன் சேவை முடக்கப்பட்டது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வங்கிகள் தங்கள் நெட் பாங்கிங் வசதியை உபயோகிக்கும்படி வாடிக்கையாளர்களை உற்சாப்படுத்தி வரும் அதே வேளையில், இன்டெர்நெட் சார்ந்த மோசடிகள் அதிகரித்து வருவது தொடர்பான தங்கள் கவலையைப் பற்றியும் குரலெழுப்ப ஆரம்பித்திருக்கின்றன.

உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், அதன் கிளைகளை "என்ஆர்ஐ வாடிக்கையாளர்களிடமிருந்து பண பரிமாற்றங்கள் தொடர்பான வேண்டுகோள்கள் இ-மெயில் மூலமாக பெறப்படும் பட்சத்தில், அது தொடர்பாக அவர்கள் கைப்பட எழுதிய லெட்டரை ஸ்கேன் செய்து அம்மெயிலுடன் இணைத்திருந்தாலும் கூட, அத்தகைய பரிவர்த்தனைகளை செயல்படுத்த வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.

பிசினஸ் லைன் பத்திரிக்கையிடம் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட பின் கிளை வங்கிகள் என்ஆர்ஐ-களின் அத்தகைய வேண்டுகோள்களை செயல்படுத்துவதை நிறுத்திவிட்டன என்று கூறியிருப்பதோடு, "இதில் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இழப்பு ஏற்படுவதில்லை, வங்கிகளும் தம் வணிகத்தை இழந்து வருகின்றன," என்றும் கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் மோசடிகள்

அதிகரித்து வரும் மோசடிகள்

என்ஆர்ஐ வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட இ-மெயில் ஐடிக்களிலிருந்து பெறப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட ட்ரான்ஸாக்ஷன்களில் மோசடி செய்யப்பட்ட பல்வேறு சம்பவங்களும் வங்கியின் கவனத்துக்கு வந்ததைத் தொடர்ந்தே இத்தகைய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. "அக்கவுன்ட் ஹோல்டர்கள் இவ்வாறு செயல்படுத்தப்பட்ட ட்ரான்ஸாக்ஷன்களுடன் முரண்பட்ட பல்வேறு சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன."

ஹேக்கிங் மோசடி

ஹேக்கிங் மோசடி

"மோசடிப் பேர்வழிகள் வாடிக்கையாளர்களின் இ-மெயில் அக்கவுன்ட்களை ஹேக் செய்து, பிற அக்கவுன்ட்களுக்கு பணத்தை மாற்றும்படி பொய்யான மெயில்களை அனுப்பி, ட்ரான்ஸாக்ஷன்களை செயல்படுத்தச் செய்துள்ளனர். பிற்பாடு இதனையறிந்த அந்த என்ஆர்ஐ அக்கவுன்ட்ஹோல்டர்கள் தாங்கள் அத்தகைய மெயில் எதையும் அனுப்பவில்லை என்று மறுத்த சம்பவங்கள் பலவும் நிகழ்நதன," என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

பாங்கிங் ரெகுலேட்டர்

பாங்கிங் ரெகுலேட்டர்

இன்டெர்நெட்-சார்ந்த இத்தகைய மோசடிகளைப் பற்றி பாங்கிங் ரெகுலேட்டர் ஏன் எவ்விதமான வழிமுறைகளும் கூற முன் வரவில்லை என்று பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ-யின் பதில்

ஆர்பிஐ-யின் பதில்

ஆர்பிஐ-யின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தியிடம் கேட்ட போது அவர், "எவ்விதமான மோசடியும் மோசடியே. இப்பிரச்சினை இருப்பது உண்மை தான்; ஆனால் இது சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினை. இதனை வேறு விதமாகத் தான் கையாள வேண்டும். எங்கள் பாலிஸி காரணமாக ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால் நாங்கள் அதனை சரி செய்ய எத்தனிக்கலாம். ஆனால் இது ஒரு சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாகும்." என்று கூறியிருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI not to carry out transactions based on email requests

While encouraging customers to make use of Net banking facility, banks have started to voice their anxiety over rising Internet-related frauds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X