பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இது நாள் வரை பிளாஸ்டிக் நாணயமாக கருதப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் நிறைந்த உங்கள் பர்ஸை வெகு விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டையும் அதில் வைக்க போகிறீர்கள்.

தற்போது பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுக்கள் காலப்போக்கில் கிழிந்து விடுவதால், பிளாஸ்டிக் ரூபாய்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் பேங்க் (RBI) தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் ரூபாய் தாழ்களை பயன்படுத்துவதினால் அதன் ஆயுள் இன்னும் அதிகமாக இருக்கும்.

சோதனை அடிப்படையில், 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை வெளியிட ஆர்.பி.ஐ திட்டமிட்டுள்ளது. அதற்காக 100 கோடி மதிப்பிலான 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்களை அது அச்சிடப்போகிறது. இதற்காக டெண்டர் வழங்கும் வேலைகளை கூட ஆர்பிஐ முடித்துவிட்டது.

பிளாஸ்டிக் நோட்டுகள்

பிளாஸ்டிக் நோட்டுகள்

"சோதனை அடிப்படையில் நாங்கள் 100 கோடி நோட்டுக்களுடன் தொடங்கவுள்ளோம். டெண்டர் செயல்முறைகள் எல்லாம் முடிந்து விட்டது. நம் நாட்டில் பிளாஸ்டிக் நோட்டுக்கள் சரிசமமாக பயன்படுத்தப்பட்டால், பிளாஸ்டிக் நோட்டுக்களை செயல்படுத்தும் கொள்கையை கொண்டு வருவோம்." என்று ஜீ பிசினஸ் தொலைக்காட்சியில் நடந்த ஒரு தனிநிலையான உரையாடலின் போது, ஆர்.பி.ஐ.யின் துணை ஆளுநர் திரு K.C.சக்ரபர்த்தி கூறியுள்ளார்.

சவால்கள்!!

சவால்கள்!!

"பலவிதமான வானிலையை கொண்ட நம்மை போன்ற ஒரு பெரிய நாட்டில், பிளாஸ்டிக் பணம் பயனுள்ளதாக இருக்குமா இல்லையா என்பது எங்களுக்கு தெரியவில்லை. நம் நாட்டில் நிலவும் அனைத்து விதமான வானிலைகளிலும் அதனால் தாக்குப்பிடிக்க முடியுமா?" என்று பிளாஸ்டில் பணத்தின் அறிமுகத்தில் உள்ள ஒரு பெரிய சவாலை பற்றி சக்ரபர்த்தி கூறியுள்ளார்.

சோதனை செய்ய 5 நகரங்கள்..

சோதனை செய்ய 5 நகரங்கள்..

இந்த பிளாஸ்டில் பணத்தை பல விதமான வானிலையில் புழங்க விட சிம்லா, புவனேஸ்வர், மைசூர், கொச்சி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய பிளாஸ்டில் பணத்தை உலகில் தற்போது 22 நாடுகளில் பயன்படுத்தி வருகிறனர்.

ரிசர்வ் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா

ரிசர்வ் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா

இந்த திட்டத்தை உலகில் முதன் முதலில் முன் மொழிந்தது ரிசர்வ் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா. பின், பேங்க் ஆப் இங்கிலாந்த், வின்ஸ்டன் சர்ச்சில் படத்துடன் 5 பவுண்ட் பாலிமர் நோட்டுக்களை தயார் செய்து 2016-ல் புழக்கத்தில் விடும் என்று டிசம்பர் மாதம் அறிவித்தது. அதே போல் ஜேன் ஆஸ்டின் படத்துடன் 10 பவுண்ட் பாலிமர் நோட்டுக்களை தயார் செய்து 2017-ல் புழக்கத்தில் விடும் என்றும் அறிவித்தது.

பிளாஸ்டிக் நோட்டுகளின் பயன்..

பிளாஸ்டிக் நோட்டுகளின் பயன்..

பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்துவதால் பல பயன்கள் உள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வைகயான நோட்டுக்களை போல் போலி நோட்டுக்கள் அச்சிடப்படுவது கடினமாக விளங்குவதே இதன் முதல் மற்றும் முக்கியமான பயனாகும். அதே போல் அவ்வகை நோட்டுக்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

நிலைப்புத் தன்மை

நிலைப்புத் தன்மை

காகித நோட்டுக்களை விட 4 மடங்கு அதிக நிலைப்புத்தன்மையை கொண்டுள்ளது பிளாஸ்டிக் நோட்டுக்கள். காகித நோட்டுக்களின் நிலைப்புத்தன்மை சராசரியாக 1 வருடமாகும்.

எகோ-ஃப்ரெண்ட்லி

எகோ-ஃப்ரெண்ட்லி

சுற்றுச்சூழலுக்கு உகந்த எகோ-ஃப்ரெண்ட்லி வகையாக இருப்பது இதன் மற்றொரு பயனாகும். அதனால் இதனை மறுபடியும் பயன்படுத்த மறுசுழற்சி செய்யலாம்.

செலவு தான் அதிகம்..

செலவு தான் அதிகம்..

இதனை அச்சடிக்கும் செலவு தான் இதில் இருக்கும் ஒரே குறையே. பேப்பர் நோட்டை அச்சடிப்பதை விட இதனை அச்சிட இரண்டு மடங்கு செலவாகும். தற்போது 11 லட்ச கோடி நோட்டுக்கள் சந்தையில் புழக்கத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reserve Bank plans to test-market plastic currency this year

RBI is mulling over the introduction of plastic currency to resolve the issue of wear and tear of paper notes. Plastic notes will increase the life of a note.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X