தமிழகத்தில் 300 தொழிற்கூடங்கள் மூடும் ஆபாயம்!! காரணம் பெல்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள கனரக மின் உபகரணங்களை உற்பத்தி செய்யும் பெல் (BHEL) நிறுவனத்தின் செயல்பாடுகளால் சிறு தொழிற்கூடங்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

பிரதான கனரக உற்பத்தியாளரான பெல் நிறுவனம் தன் மாற்றான் தாய் போக்கின் காரணமாக தமிழகத்தில் உள்ள சுமார் 150 தொழிற் கூடங்களை மூடும் நிலைக்கு தள்ளி விட்டது. இந்த 150 தொழிற்கூடங்களுக்குமே பெல் நிறுவனத்தின் பிரதான வாடிக்கையாளர். இந்த தொழிற்கூடங்கள் அனைத்தும் இந்த நிதியாண்டிற்குள் மூடப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

தமிழகத்தில் 300 தொழிற்கூடங்கள் மூடும் ஆபாயம்!! காரணம் பெல்

திருச்சிராபள்ளி பெல் நிறுவனம் தன் அடிப்படை மூலப் பொருள்களை பெல் தொழிற்கூடங்களுக்கு அளிக்க தொடங்கியதில் சிக்கல் துவங்கியது. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெல் நிறுவனம் இந்த மூலப் பொருள்களை மற்ற தொழிற்கூடங்களுக்கு தான் அளித்து வந்துள்ளது. இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டதால் விற்பனையாளர்கள் பெரும் நட்டத்தை சந்திக்கின்றனர்.

மொத்தம் உள்ள 450 சிறு தொழிற் கூடங்களில் புதுக்கோட்டை தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள சுமார் 100 தொழிற் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் 150 தொழிற்கூடங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன என்று தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில் சங்கம் (TANSTIA ),மற்றும் பெல் சிறு தொழில் சங்கத்தின் (BHELSIA ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்து வரும் விற்பனை உத்தரவுகள் மட்டுமின்றி நாட்டில் செயல் ஆக்க திட்டங்களில் மந்தமான போக்கின் காரணமாகவும் விற்பனையாளர்கள் பாதிப்பு அடைகின்றனர்.

தமிழகத்தில் 300 தொழிற்கூடங்கள் மூடும் ஆபாயம்!! காரணம் பெல்

இந்த தொழிற் கூடங்கள் தொழிற்கூடங்களின் செயல் ஆற்றலில் 25-30 % மட்டுமே இயங்குவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நாட்டில் உள்ள 12 மின் ஆற்றல் உற்பத்தி திட்டங்கள் சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றன எனவும் தொழிற்துறை சங்கம் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்திக்கான நிதி உதவி குறைத்ததும், நிலக்கரி கொள்முதல் குறைந்ததும் கூட இந்த நிலைக்கு காரணமாகும். இது குறித்து பெல் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

ஒரு நிறுவனத்தின் மாற்றான் தாய் போக்கு பல தொழிற்கூடங்களை மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது, மேலும் இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மிகவும் கவலைக்குரிய விடயமே.இந்த நிலை விரைவில் மாற்றம் பெற வேண்டும் என்பதும் நிதர்சனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bhel trichy puts small industries at risk

About 150 small industrial units in Tamil Nadu may be facing possible closure by the end of this financial year because of alleged step-motherly treatment to them by public sector giant BHEL Tiruchirappalli, their main customer.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X