மலேசியாவில் ஐஐடி கல்லூரியை திறக்க வேண்டுகோள்!! திறக்கப்படுமா??..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் சிறந்த கல்லூரி என்றாலே நாம் அனைவரும் கண்களை முடிக்கொண்டு சொல்வோம் ஐஐடி என்று. உண்மை தான் இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவில் ஐஐடி டாப் 50 சிறந்த கல்லூரிகளில் ஒன்று. இத்தகைய கல்லூரி இந்தியாவில் இருப்பது நமக்கு பெருமையான விஷயம். ஆனால் இதில் ஒரு சங்கடமான விஷயமும் உண்டு. இத்தகைய உலக தரம் வாய்ந்த கல்லூரிகளில் படித்த இந்திய இளைஞர்கள் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். (பிறகு இந்தியாவை யார் வல்லரசு நாடாக மற்றுவது??..)

இந்த பெருமைக்குரிய ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியை தங்கள் நாட்டிலும் ஒரு கிளையை துவக்க நம் அன்டை நாடான மலேசியா வேண்டியுள்ளது. இந்த தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் சுமார் 2 மில்லியன் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றச்சூழல்களுக்கான மலேசிய பெடெரல் அமைச்சர் டட்டு செரி ஜி. பழனிவேல், இந்தியாவில் நடைபெற்ற 12-ஆவது பிரவசி பாரதிய திவாஸ் விழாவில் உரையாற்றுகையில், தன் நாட்டில் கிளை திறக்க ஐ.ஐ.டி-க்கு அழைப்பு விடுத்தார்.

சிறந்த கல்வி பெற...

சிறந்த கல்வி பெற...

பல் மருத்துவம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்றவைகளை படித்திட மலேசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த சில கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே மலேசியாவில் கிளைகளை திறந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

நாங்க ரெடி.. நீங்க??..

நாங்க ரெடி.. நீங்க??..

பிரவசி பாரதிய திவாசின் சிறப்பு விருந்தாளியாக வந்திருந்த பழனிவேல், மலேசிய இந்தியன் காங்கிரஸின் தலைவராவார். பையோடைவர்சிட்டி துறையில் இந்தியாவுடன் இனைந்து மிகவும் நெருக்கமாக வேலை செய்ய அவர் நாடு விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் பெருமை..

இந்தியாவின் பெருமை..

இயற்களை வளங்கள் மற்றும் பயன்களை பகிர்தலுக்கான வரைவுச் சட்டம் முடிவாக வேண்டிய நேரத்தில், தேசிய உயிரிய வேற்றுமை சட்டத்தை அமுல்படுத்திய இந்தியாவின் அனுபவத்திலிருந்து மலேசிய அரசாங்கம் கற்றுக் கொண்டது என்று அவர் தெரிவித்தார்.

மகாத்மா..

மகாத்மா..

மகாத்மா காந்தி, 1915-ஆம் ஆண்டு இதே நாளில் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியதை நினைவு கூறும் வகையில் இந்த விழா ஒவ்வொரு வருடமும் ஜனவரி 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்று அவர் நினைவு படுத்தினார்.

வயலார் ரவி

வயலார் ரவி

இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள நம் மக்கள் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூமியோடு தொடர்பில் இருக்க இந்த கொண்டாட்டங்கள் உதவும் என்று வெளிநாட்டு இந்திய விவகார அமைச்சர் வயலார் ரவி தன் வரவேற்பு உரையில் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIT invited to open centre in Malaysia

Malaysia today invited the Indian Institute of Technology (IIT) to set up a branch in the south-east Asian country which has nearly two million people of Indian origin.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X