இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் வருமானம் பாதிப்பு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டிசம்பர் 2013 உடன் முடிவடைந்த காலாண்டில் வர்த்தகத்தில் நிலவி வந்த பருவகால பலவீனங்கள் மற்றும் முந்தைய காலாண்டைப் போல ரூபாயின் மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, முன்னணி மென்பொருள் சேவை நிறுவனங்களின் செயல்திறன் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ ம்றும் ஹெச்.சி.எல் ஆகிய நான்கு நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் கூட்டாக 1.5 சதவிகிதம் வருமானம் உயர்ந்தாலும், கடந்த ஆண்டின் மொத்த இலாபத்தை கருத்தில் கொண்டால் அது 3 சதவிகிதம் குறைந்திருப்பதாக எக்கானாமிக் டைம்ஸ்-ன் இன்டலிஜன்ஸ் குழுவினரின் மதிப்பீடுகள் சொல்கின்றன.

மதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களின் வருமானம் மற்றும் மொத்த இலபாம் ஆகியவை கடந்த ஆண்டில் 15% வளர்ந்திருந்ததை எண்ணும் போது, டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு மந்தமான செயல்பாடுகளையே வெளியே காட்டுகிறது. உறுதியான வளர்ச்சி மற்றும் முக்கியமான நாணயங்களில் 10%-ற்கும் அதிகமான ரூபாய் மதிப்பின் குறைவு ஆகியவற்றால் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் வருமானம் பாதிப்பு!!

மாறாக, பல்வேறு விழாக்களை கொண்டிருந்த காரணத்தால் டிசம்பர் மாதத்தில் குறைவான வேலை நாட்களே இருந்தன. இது முன்னணி நிறுவனங்களின் வேலை அளவை குறைத்து, அதன் காரணமாக அவற்றின் வருமானத்தையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களில், டாலர்களை முன்னிலைப்படுத்தி வந்த வருமானம் 1.5-ல் இருந்து 3 சதவிகிதமாக இருக்கும். இவற்றில் டி.சி.எஸ்-ன் வளர்ச்சி மிகவும் அதிகமாகவும் மற்றும் விப்ரோவின் வளர்ச்சி குறைவாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது காலாண்டில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு எல்லையைத் தாண்டாமல் ரூ.62 ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய காலாண்டின் சராசரி டாலர் மதிப்பான 62.1-ஐ போலவே இருந்ததால், தொடர்ந்து மற்றொரு காலாண்டில் ரூபாய் மதிப்பு குறைந்தததன் ஆதாயத்தை மென்பொருள் நிறுவனங்களால் அனுபவிக்க முடியவில்லை. குறைவான செயல்பாடுகள் மற்றும் நாணய மதிப்பு சமநிலையுடன் இருந்ததன் காரணமாக இலாபத்தில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படுவது தடுக்கப்பட்டு விடும். செயல்பாட்டிற்கான இலாபங்கள் சமநிலையுடன் இருக்கும் அல்லது தொடர்ந்து பலவீனத்தையே காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.

முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸ் மிகவும் உறுதியான தொடர் வளர்ச்சியை மொத்த இலாபத்தில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலாண்டில், இந்நிறுவனம் ஒரு முறை மட்டும் செய்யப்படும் செலவினமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அமெரிக்க விஸா பிரச்னைகளை சந்தித்தது. இந்த காலாண்டில் இது போன்ற வெளிச் செலவுகள் இல்லாததால் மொத்த இலாபம் அதிகமாக இருக்கும். இன்போசிஸ் தவிர, மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்ட மற்ற முன்னணி நிறுவனங்களின் மொத்த இலாபம் தொடர்ச்சியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிறுவனங்களின் புவியமைப்பு ரீதியான தேவைகள் பற்றி பார்வைகள் மற்றும் 2014-ம் ஆண்டின் வாடிக்கையாளர்களின் பட்ஜெட் பற்றி எதிர்பார்க்கப்படும் போக்குகள் ஆகியவற்றைப் பற்றிய நிர்வாக கருத்துகள் நெருக்கடியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், எத்தனை வாடிக்கையாளர்கள் சேருவார்கள் மற்றும் ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு பேர் என்பதை கண்காணிக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Low volumes, stable Rupee to hit earnings of TCS, Infosys, Wipro & HCL Tech

Top-tier software services firms are expected to report a subdued performance for the quarter to December 2013.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X