வீட்டுக் கடன் திட்டத்தில் இப்போது சேமிக்கலாம்!! முன்செலுத்தும் முறை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வாழ்வின் அடிப்படை தேவைகளில் ஒன்றான வீடு நம் அனைவரின் வாழ்விலும் ஒரு சராசரி கனவாகவே உள்ளது. சில சமயங்களில் நம் பொருளாதார வசதி அதற்கு சாதகமானதாக இல்லாத பொது வீட்டுகடன் மூலமாக நமது கனவு இல்லத்தை நம் நமதாகிக் கொள்ள முடியும். வீட்டுக் கடனை திரும்ப செலுத்துவது சிலருக்கு ஏன் பலருக்கு கடும் சவாலகவே விளங்குகிறது. இத்தகைய சவாலான சிக்கல்களில் இருந்து தப்பி, எளிய முறையில் கடனை செலுத்துவது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

 

பெருவாரியான வங்கிகளில் பலதரப்பட்ட வீட்டுகடன் வசதிகளை தருவதுடன், வாடிக்கையாளர் கவரும் வகையில் வங்கிகள் உக்கமும் படுத்தி வருகின்றனர். ஆனால் வீட்டுக் கடனானது நமது இல்லக் கனவை நிறைவேற்றித் தருகிறது. இத்தகை வீட்டுக்கடன் ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபக்கம் இக்கடனை செலுத்த முடியாத பட்சத்தில் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்வோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

வீட்டுக் கடனை திரும்ப செலுத்துவதை எளிமையனதாக்க இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கி இணைந்து அனைத்து வங்கிகளுக்கும் மிதவை விகிதம் அபராதத்தை நீக்கவும் , சரியான வட்டி விகிதத்தை மட்டுமே வசூலிக்குமாறு உத்தரவிட்டுள்ளது இதன் மூலமாக வீட்டுகடன் செலுத்துபவர்கள் அபராதம் செலுத்துவது தவிர்க்கப் படுவதுடன் கடனை திரும்ப செலுத்துவதில் ஒரு குறிப்பிட்ட தொகையையும் மிச்சப்படுத்த முடியும்.

முன்செலுத்தும் முறை

முன்செலுத்தும் முறை

மேலும் வங்கிகள் கடனை திரும்ப செலுத்துவதற்காக முன்செலுத்தும் முறையினை (prepay system) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் வங்கிக் கணக்கில் குறிபிட்ட கடன் தவணை தொகைக்கும் அதிகமான தொகையை செலுத்த முடியும், அதன் மூலமாக அவரது கடன் தொகைக்கான வட்டியும் , கடனை திரும்ப செலுத்துவதற்கான கால வரையரையும் குறைத்துக் கொள்ள முடியும்.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

ஒருவரின் சம்பள கணக்கை கடன் அளித்த வங்கியோடு இணைப்பதன் மூலம் வங்கிகள் மாத தவனைக்கான குறிப்பிட தொகையை வங்கி தானாக எடுத்துக் கொள்ளும், இதனால் அவர் பிரதி மாதத் தவணை செலுத்துவதும் பாதிக்காது.

தேவைக்கு உதவும் திட்டம்
 

தேவைக்கு உதவும் திட்டம்

முன்செலுத்தும் முறையினால் மேலும் சில நன்மைகள் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் நாம் அதிகமாக செலுத்தும் தொகையினை நமக்கு தேவைப்படும் பொழுது நம்மால் எடுத்துக் கொள்ள முடியும்.

வட்டி அதிகம்..

வட்டி அதிகம்..

மேலும் இந்த சலுகையானது நமக்கு 25-50 அடைப்படை புள்ளி விலையில் கிடைக்கிறது. இது சாதாரண வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை விட சற்று அதிகமே .

வங்கிகள்

வங்கிகள்

இந்த முன்செலுத்தும் முறை சலுகையானது இந்தியாவின் பெரும்பாலான வங்கிகளில் கிடைக்கப் பெறுகின்றது, குறிப்பாக ஹெச்எஸ்பிசி-யின் "ஸ்மார்ட் ஹோம்", எஸ்பிஐ-யின் "எஸ்பிஐ மேக்ஸ் கெயின்", ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் "ஹோம் சேவர்" மற்றும் "ஹோம் கிரெடிட்" ஆகியவை அவற்றுள் சில .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to Repay and Save On Home Loans?

Home is one of the basic necessities of life and to have a home of our own choice is one of the most common dreams in everyone’s life. At times, when we are not financially strong enough, home loans fulfills our dream to have a home of our own choice.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X