இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு ஒர் நற்செய்தி... 3%-8% ஊதிய உயர்வு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி ஆவார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை இந்தியாவில் அனைவரும் விரும்புகின்ற நிறுவனமாக்க நாராயணமூர்த்தி எடுத்து வரும் நடவடிக்கைககளில் முக்கியமான ஒன்றான ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு. இந்த ஊதிய உயர்வை எதிர்பார்த்து கொண்டிருக்கும் அனைத்து இன்போசிஸ் உழியர்களுக்கும் இது ஒரு இனிமையான செய்தியாகவே இருக்கும்.

 

பங்குச்சந்தையில் கடந்த திங்களன்று இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது வளர்ச்சியான பாதையில் உயர் சாதனையை பதிவு செய்தததை தொடர்ந்து, இந்நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டிற்கான நிதிஅறிக்கையை வெளியிட்டது. வெளிநாட்டு பணிகளை மேற்கொள்தல் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வழங்கியில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் தனது வருமானத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி அந்நிறுவனத்தின் மோசமான காலகட்டம் முடிந்து விட்டதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

ஏப்ரல் மாதம் முதல் உயர்வு

ஏப்ரல் மாதம் முதல் உயர்வு

இன்ஃபோசிஸ் (infosys) நாராயணமூர்த்தி வெள்ளியன்று, வெளியிட்ட அறிக்கையில் தனது நிறுவனத்தில் உள்ள ஏறத்தாழ 1.5 இலட்சம் ஊழியர்களுக்கு நற்செய்தி அளிக்கும் வகையில் வரும் ஏப்ரல் முதல் ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என்றார்.

2 வருட நிலுவை

2 வருட நிலுவை

பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஊதிய உயர்வினை அறிவிக்கும். ஆனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி சரிவினால் கடந்த 2 வருடங்களாக தன் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வினை நாராயணமூர்த்தி ஒத்தி வைத்திருந்தார்.

மிககுறைவான ஊதிய உயர்வு..
 

மிககுறைவான ஊதிய உயர்வு..

கடந்த 2012-ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வினை அக்டோபர் மாதமும் சென்ற வருடத்திற்கான ஊதிய உயர்வினை ஜூன் மாதமும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம் ஆன்சைட் (onsite) ஊழியர்கள் 3% ஊதிய உயிர்வினைப் பெற்றனர்.மற்றும் உள்நாட்டு ஊழியர்களின் ஊதியமும் சராசரியாக 8% உயர்ந்தது. தனது நிறுவனத்தின் வளர்ச்சி குறைவினை சரி செய்யும் நோக்கில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டை இலக்க ஊதிய உயர்வினை வழங்க உள்ளதாக nomura தெரிவித்தது.

8% ஊதிய உயர்வு..

8% ஊதிய உயர்வு..

2014 -ல் உள்நாட்டு மற்றும் ஆன்சைட் (onsite) ஊழியர்களுக்கு 2% மற்றும் 8% ஊதிய உயர்வினை வழங்க முடிவு செய்திருந்ததாகவும் எனினும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறைவினை எதிர்த்து சமாளிக்க ஊழியர்களுக்கு இரட்டை இலக்க ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், nomura -ன் அஸ்வின் மேத்தா மற்றும் பிங்கு பாப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.

ஆட்குறைப்பு நடவடிக்கை

ஆட்குறைப்பு நடவடிக்கை

ஏறத்தாழ 5 ஆண்டுகளாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை, தற்போதுள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அளிக்க வல்ல வாய்ப்பினை உருவாகியுள்ளது. அந்நிறுவனம் தற்போது தனது குறைவான வளர்ச்சியை எதிர்த்து போராடி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 17.3%-ஆக இருந்த குறைவளர்ச்சி வீதம் அந்நிறுவனம் தன் வரலாற்றில் இது வரை கண்டிராத அளவு டிசம்பரில் 18.1%-ஆக உயர்ந்தது.

ஆட்குறைப்புக்கு  என்ன காரணம்??

ஆட்குறைப்புக்கு என்ன காரணம்??

விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக தான் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் வெளியேற்றப்படும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் திரு நாராயணமூர்த்தி தெரிவிக்கையில் செயல்பாடுகளை தவிர்த்து வேறெந்த காரணத்தையும் அடிப்படையாக கொண்டு விற்பனைத்துறையில் ஆட்குறைப்பிற்கு வழியில்லை என்றார். மேலும் தனது விற்பனை திறனை அதிகப்படுத்தும் முயற்சியில் இன்போசிஸ் நிறுவனம் உந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விப்ரோ - இன்ஃபோசிஸ்

விப்ரோ - இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் தனது விற்பனை மற்றும் மார்கெட்டிங் துறைக்காக தனது ஒட்டுமொத்த வருவாயில், 10% செலவழிக்கிறது. இது இன்போசிஸ் -ஐ விட 20% குறைவான வருவாயை கொண்டிருக்கும் விப்ரோ நிறுவனம் தனது விற்பனை மற்றும் மார்கெட்டிங் துறைக்காக செலவிடும் தொகையை விட குறைவு ஆகும் என்று nomura தெரிவிக்கிறது.

அதிக செலவினங்கள்

அதிக செலவினங்கள்

உயர்ந்த வளர்ச்சி இலக்கினை கொண்டு செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம் அதற்காக தேவைப்படும் செலவினங்களையும் அதிகப்படுத்த வேண்டும் என்றும், தற்போது 4.9% -ஆக உள்ள செலவின தொகையை 5.7%-ஆக உயர்த்த வேண்டும் என்றும் nomura ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாராயணமூர்த்தியின் பதில்

நாராயணமூர்த்தியின் பதில்

இன்ஃபோசிஸை அனைவரும் விரும்புகின்ற நிறுவனமாக்கவே தான் இருக்கிறது. இதற்காக தான் நாங்கள் அனைவரும் உழைத்து கொண்டிருப்பதாகவும், தனது இலக்கினை எட்ட இந்த வருடம் ஊதிய உயர்வு வழங்குவது முதல் முயற்சியாக அமையும் என்று நாராயணமுர்த்தி தெரிவித்தார்.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியினை தந்துள்ளது,ஊழியர்கள் தங்கள் உழைப்பின் மூலம் நாராயணமூர்த்திக்கு மகிழ்ச்சியான செய்தியினை தருவர் என்று நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys employees may get double-digit wage hikes

Infosys shares hit a record high on Monday on the back of a third straight beat in its quarterly results announced on Friday. India's second largest outsourcer also announced a return to double-digit growth indicating the worst was perhaps over for company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X