2014ம் ஆண்டில் பங்குச் சந்தையில் கலக்கபோகும் டாப் 10 நிறுவனங்கள்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2014 பொதுத் தேர்தலின் போது, இந்திய பங்கு சந்தைப் பதிவுகள் உயர்மட்டத்தை எட்டும் என உள்நாட்டு பங்கு வணிக நிறுவனமான SMC தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பொருளாதார செயல்பாடுகளின் முன்னேற்றம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதியான அரசின் சிறப்பாக முடிவெடுக்கும் கொள்கை மற்றும் முதலீட்டு சூழலில் ஏற்பட்டுள்ள மேம்பாடு ஆகியவை பங்குச் சந்தையில் எழுச்சியைத் தூண்டும் என இந்த தரகு நிறுவனம் கூறுகிறது.

 

அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டம், ஐரோப்பாவின் கடன் நெருக்கடி மற்றும் சீனாவின் சரிந்துவரும் பொருளாதாரம் ஆகியவை முதலீட்டாளர்களை விளிம்பிற்கு தள்ளக்கூடிய சக்திகள் எனவும் இந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் அதிக லாபம் தரும் 10 நிறுவனங்களை இங்கு காண்போம். நிறுவனங்கள் கடந்த 2 வருட பங்கு செயல்பாடுகளை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பது அதானி போர்ட், கைரன் இந்தியா, மற்றும் குரோம்டன் கிரீவ்ஸ். மற்ற நிறுவனங்களை கீழே உள்ள ஸ்லைடரில் காண்போம்

அதானி போர்ட்

அதானி போர்ட்

வருமானம் மற்றும் லாபம் ஆகியவற்றின் சீரான வளர்ச்சியின் காரணமாக, அதிக முதலீட்டு செலவுகள் மத்தியிலும் இந்த நிறுவனத்தில் வளர்ச்சி உத்வேகம் காணப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்கு விலை ரூ.151.45

கைரன் இந்தியா

கைரன் இந்தியா

ஒரு வலுவான நிதி செயல்திறன் கொண்டு மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் சர்வதேச முக்கிய பகுதிகளில் சொத்துகளை கைபற்றுவதில் கவனம் செலுத்துகிறது. தற்போது இந்நிறுவனம் தென் ஆபிரிக்க பகுதியில் சொத்துகளை கைபற்றுவதற்காக நிலஅதிர்வு ஆய்வையும் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை ரூ.326

குரோம்டன் கிரீவ்ஸ்
 

குரோம்டன் கிரீவ்ஸ்

வருங்கால உலக வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிகளவில் முதலீடு செய்ய இந்நிறுவனம் தயாராக உள்ளது. ஆடர்களின் வலுவான ஒத்துழைப்பு காரணமாக, இந்த நிறுவனம் ஒரு சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்கு விலை ரூ.114.35.

எஸ்கார்ட்ஸ் லிமிடெட்

எஸ்கார்ட்ஸ் லிமிடெட்

வரவிருக்கும் மாதங்களில் இயக்க செயல்திறனை மேம்படுத்தும் செயல்பாட்டில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது. உயர் சக்திவாய்ந்த மற்றும் சிறப்பு ட்ராக்டர்களை அறிமுகம் செய்ததன் விளைவாக, கடந்த சில காலாண்டுகளாக தொடர்ந்து வலுவான பயன் கிடைத்து வருவதால், இந்த நிறுவனம் மேம்படுத்தப்படுவதோடு, நிறுவனத்தின் லாப விகிதமும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பங்கு விலை ரூ.117.25.

எஸ்சல் ஃபுரோபெக்

எஸ்சல் ஃபுரோபெக்

அதிவேகமாக விற்பனை செய்யப்படும் நுகர்வுப்பொருள் துறையின்(FMCG) வலுவான மற்றும் நீடித்த வளர்ச்சி இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தித் (R&D) திறன், உலகளவிலான வாடிக்கையாளர் நெட்வொர்க், பெரியளவிலான உற்பத்தி நிபுணத்துவம் ஆகியவை, உலகம் முழுவதும் உள்ள வாய்ப்புக்களைக் கைப்பற்றுவதற்கு உதவியாக அமையும். இதனால் இந்த வருடம் அதிகபடியான வளர்ச்சியை இந்நிறுவனம் அடையும்.

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா

விவசாய கருவிகள் உற்பத்தியில் இந்த நிறுவனத்தின் வலுவான நிபுணத்துவம், நிறுவன வெளிநாட்டு சந்தை விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. புதிய தயாரிப்புகள் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சிகான முயற்சிகள் மற்றும் விலை ஏற்றம் ஆகியவை, சுமார் 11 சதவிகிதம் லாபவிகிதத்தில் வணிகத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்தியாவின் பொது துறை வங்கிகளில் ஸ்டேட் வங்கிக்கு அடுத்ததாக சிறப்புடன் செயல்பட்டு வருவது பஞ்சாப் நேஷனல் வங்கி தான். இவ்வங்கியின் செப்டம்பர் காலாண்டு செயல்திறன் ஒரு விதிவிலக்காக அமைந்தது. அடுத்த அரையாண்டில், பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு சிறப்பான செயல்பாட்டை பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீசா ஸ்டெர்லைட்

சீசா ஸ்டெர்லைட்

உலகத்தரம் வாய்ந்த சொத்துகள், சிறப்பான நடவடிக்கைகள் மற்றும் வலுவான வரலாற்று பதிவு. ஆவியாகக்கூடியய் பொருட்களின் விலைகள் மற்றும் கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இரும்புத் தாது நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளபோதிலும், கடந்த செப்டம்பர் 2013 காலாண்டில், இந்த நிறுவனம் ஒரு வலுவான வர்த்தகச் செயல்பாடு மற்றும் நிதி செயல்பாடுகளை வெளிக்காட்டியுள்ளது. கோவா சுரங்கத் தொழில் தடை, விரைவில் உச்ச நீதிமன்றம் மூலம் தீர்க்கப்படும் என்பதால், இந்த நிறுவனம் விரைவில் கர்நாடகா மாநிலத்தில் சுரங்கத் தொழில் நடவடிக்கைகளை மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொரண்ட் பார்மா

டொரண்ட் பார்மா

மேலதிக இட விரிவாக்கம் மற்றும் கார்டுகளில் புதிய மருத்துவ பிரிவுகளை அதிகரித்தல். அதேபோல் இதன் தற்போதைய போர்ட்ஃபோலியோவின் இடைவெளியை நிரப்புவதற்காக புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.

விப்ரோ

விப்ரோ

செப்டம்பரில், கடந்த ஏழு காலாண்டுகளில் இந்த நிறுவனம் ஒரு வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. முதல் 125 கணக்குகளில் கவனம் செலுத்தப்பட்டிருக்கும் இதன் வியாபார உத்தியே இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். வாடிக்கையாளர் எண்ணிகையிலும் ஒரு மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஒப்பந்த வெற்றி விகிதம் மற்றும் பெரியளவிலான பல ஆண்டு ஒப்பந்தங்கள் ஆகியவையும் இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ten stocks that can deliver up to 50% in 2014: SMC

Indian stock markets will hit new highs post general elections in 2014.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X