இந்திய தொழில்துறையில் சக்தி வாய்ந்த பெண்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: எல்லோரும் கனவு காணலாம். ஆனால், திறமை, அதிர்ஷ்டம் மற்றும் விடாமுயற்சி போன்றவை வாய்க்கப்பெற்ற சிலரால் மட்டுமே தங்களின் கனவை நனவாக்கிக் கொள்ள முடிகிறது. இந்த வகையில் இந்தியத் தொழில்துறையின் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் வருடாந்தர பட்டியல் பிஸ்னஸ் டூடே அறிவித்துள்ளது. தம் சொந்த வாழ்வில் ஏற்படக்கூடிய தடைகள் உள்ளிட்ட எண்ணிலடங்கா சவால்களை எதிர்த்துப் போராடி தங்கள் கனவுகளை நனவாக்கிய பெண்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது இந்த கட்டுரை அமைந்தது.

இனி எதிர்பாலினருடனான அற்பமான ஒப்பீடுகளுக்கு அவசியமே இருக்காது. இப்பெண்கள் அனைவரும் தம் பணிகளையும், வீட்டையும் சமமான உத்வேகத்துடன் பராமரித்து, தத்தம் வாழ்வை சௌகரியமான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 பெண்களுள் 16 பெண்கள் புதுமுகங்கள் என்பது குறிப்பிடதக்கது, மேலும் இது போன்ற ஆற்றல் வாய்ந்த பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதையே காட்டுகின்றது. முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள், மார்க்யூ டீல் மேக்கர்கள், மிக உன்னிப்பான வழக்கறிஞர்கள், நிர்வாக இயக்குனர்களாக (எம்டி) உருவெடுத்த குடும்பத் தலைவிகள், விற்பனை வித்தகிகள், சமையற்கலை வல்லுநர்கள், பிஎஸ்யூ வங்கி தலைவிகள், ஐடி ஊழியர்கள் போன்றவர்கள், பலதரப்பட்ட நம் பட்டியலில் "புதிதாக நுழைவோர்" என்ற பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 30 பெண்கள் தவிர்த்து, மேலும் மூன்று பெண்மணிகள், இந்த பட்டியலில் குறைந்த பட்சம் ஏழு முறை இடம்பிடித்துள்ளவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதும், பெருமதிப்பு பெற்றதுமான "ஹால் ஆஃப் ஃபேம்" பிரிவிற்குள் நுழையும் பெருமையைப் பெற்றுள்ளனர்.

நமது பட்டியலை திறந்தவுடன் முதலில் நிற்பது, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் எம்டியாகிய வினிதா பாலி, மல்ட்டிபிள் ஆல்டர்நேட் அஸ்ஸெட்ஸ் மேனேஜ்மென்ட்டின் எம்டி மற்றும் சிஇஓவாகிய ரேணுகா ராம்நாத் மற்றும் ஹெச்டிஎஃப்ஸி எம்டியாகிய ரேணு சுத் கர்னாட் ஆகியோர் ஆவார். மேலும் இப்பட்டியலில் இடம் பிடித்த மற்ற பெண்களையும் பார்போம்.

வினிதா பாலி

வினிதா பாலி

இவர் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.

ரேணுகா ராம்நாத்

ரேணுகா ராம்நாத்

மல்ட்டிபிள் ஆல்டர்நேட் அஸ்ஸெட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.

 

 

வனிதா நாராயணன்

வனிதா நாராயணன்

மென்பொருள் மற்றும் வன்பொருளின் தயாரிப்பு, மேம்பாடுகளில் உலகின் முதன்மை நிறுவனமாக திகழும் ஜபிஎம் நிறுவனத்தின் இந்திய கிளைகளுக்கு நிர்வாக இயக்குனர் ஆவார்.

 

 

பல்லவி ஷெராப்

பல்லவி ஷெராப்

இவ்ர இந்தியாவின் மிக முக்கிய வழக்கறிஞர்களுள் ஒருவர். மேலும் அமர்சந் & மங்கள்தாய் & சுரேஷ் ஏ ஷெராப் & கோ என்னும் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர் நிறுவனத்தின் மூத்த பங்குதாரராக விழங்குகிறார்.

சுப்புலக்ஷ்மி பான்சே

சுப்புலக்ஷ்மி பான்சே

நாட்டின் மிக முக்கியமான அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் தான் இந்த சுப்புலக்ஷ்மி பான்சே. இவரின் செயல் திட்டங்கள் வங்கியின் செயல்பாடுகளை பல பரிமானங்களில் வளர்ந்தது.

இன்னும் பல

இன்னும் பல

இந்த பட்டியலில் வினிதா சிங்கானியா, பிரியா நாயர், அஞ்சலி பன்சால், சவருப்பா சான்யால், சவித்தா மாகஜன், ரேனு சுத் கார்நாட், நிஷ் வாசுதேவா, ரித்து டால்மியா, சுமித்ரா கோம்தம், ஆஷா குப்தா, சாந்தி ஏகாம்பரம் ஆகியோர் அடங்குவர்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Most Powerful Women in Indian Business

Many dream. But only a few, gifted with talent, tenacity and luck, manage to realise their dreams. Here we are proudly present the listing of the Most Powerful Women in Indian Business 2013.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X