மலையென உயர்ப்போகும் தங்கம் விலை!! இருப்பை அதிகரிக்கும் நகை கடைகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2013ஆம் ஆண்டில் தங்கம் விலை 28 சதவீதம் குறைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்தியது. அதேபோல் இந்த வருடமும் ஒரு ஆச்சரியம் நமக்காக காத்து கொண்டு இருக்கிறது.

பெரும் சரிவைக் கண்ட தங்கம் இந்த வருடம் 10 கிராமிற்கு உச்சக்கட்டமாக 33,000 ரூபாயை தொடவுள்ளதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சாமானியர்கள் மத்தியில் இந்த செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரித்தி சித்தி புல்லியன்ஸ் லிமிடெட் (RSBL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரித்திவிராஜ் கோத்தாரி இது குறித்து கூறுகையில் நடப்பாண்டில் தங்கத்தின் சராசரி விலை 10 கிராமிற்கு 28,000 ரூபாயாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ரூ.33,000 வரை உயரும்

ரூ.33,000 வரை உயரும்

தங்கத்தின் அடிப்படை விலை ஒரு அவுன்சுக்கு 1375 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள் நாட்டுச் சந்தையில், தங்கத்தின் விலை நிலை 10 கிராமிற்கு 25000 முதல் 33000 ஆயிரம் வரையும் அடிப்படை விலை சராசரியாக ரூபாய் 28000 வரையும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கம் சரி, வெள்ளி??

தங்கம் சரி, வெள்ளி??

தங்கத்தின் விலை உயரும் போது வெள்ளி மட்டும் என்ன விதி விலக்கா. வெள்ளியின் அடிப்படை விலை சராசரியாக ஒரு கிலோவிற்கு 2500 அமெரிக்க டாலர்களாக இருக்கும் எனவும், உள்நாட்டு சந்தையில் அதன் சராசரி விலை கிலோவிற்கு 45000 ரூபாய் இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெள்ளி 55,000 வரை உயரும்
 

வெள்ளி 55,000 வரை உயரும்

வெள்ளியின் வர்த்தக விலை நிலைகள் ரூபாய் 37,000-லிருந்து 55,000 வரை இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரித்தி சித்தி புல்லியன்ஸ் லிமிடெட்

ரித்தி சித்தி புல்லியன்ஸ் லிமிடெட்

கோத்தாரி குழுமமான RSBL நிறுவனம் விலை உயர்ந்த உலோகங்கள், சிறப்பு உலோக பார்கள், மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட நாணயம் ஆகிய வர்த்தக செயல்பாடுகளில ஈடுபட்டுள்ளது.

12 வருட உயர்வு..

12 வருட உயர்வு..

பன்னிரண்டு வருட தொடர்ந்த விலை உயர்வை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 2013 ஆம் ஆண்டு 28 சதவிகித சரிவை சந்தித்தது. இது 1981 ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத மிகக் கூர்மையான சரிவாகும்.

மத்திய அரசின் உள்ளிடு..

மத்திய அரசின் உள்ளிடு..

2012-13 ஆம் ஆண்டில் 88 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உச்சத்தை எட்டிய நடப்புக்கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு தங்க முதலீடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.

தங்கம்

தங்கம்

இந்தியாவின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குக் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் ஒரு அவுன்சுக்கு 1,910 அமெரிக்க டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட 24 கேரட் தங்கம் அதன் பின் அப்போது தான் சரிவடைந்துள்ளதாக கோத்தாரி குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price may rise to Rs 33,000 per 10 grams this year

Gold prices, which crashed by 28 percent in 2013, are expected to touch a high of Rs 33,000 ($532) per 10 grams this year, a bullion market operator said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X