வதைபடும் சிங்கப்பூர் பணியாளர்கள்!! வளமைக்குப் பின்னே உள்ள கொடுமை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெதர்லாந்து: செழுமையான சிங்கப்பூர் நாட்டின் பணியாளர்கள் உலகிலேயே மிகவும் அமைதியற்றவர்களாக இருப்பதாகவும் அடுத்த வருடத்திற்குள் அவர்களில் மூன்றில் இரு பங்கினர் வேலையை விடும் நிலையில் இருப்பதாகவும் பணியாளர் தேர்வு நிறுவனமான ரான்ஸ்டாட் குழுமம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின் மூலம் அதிர்ச்சித் தகவலை வெளிவந்துள்ளது.

 

அந்த நிறுவனத்தின் வோல்டு ஆஃப் வொர்க் எனப்படும் ஆய்வை நடத்தியது, இந்த ஆயிவில் பங்கு பெற்ற 23 சதவிகித பணியாளர்கள் தாங்களை ஊக்கப்படுத்தப்படவில்லை எனவும் தங்கள் திறமைகள் சரிவர பயன்படுத்தப்படுத்துவதில்லை எனவும், மேலும் 64 சதவிகித பணியாளர்கள் அடுத்த 12 மாதங்களுக்குள் தங்கள் வேலையை விட முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த அதிருப்திக்கு முக்கிய காரணங்களாக, பொருந்தார நிறுவன கலாச்சாரம், கடுமையான மேலதிகாரிகள் மற்றும் குறைந்த வசதிகளோடு அதிகம் வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தகள் ஆகியவை இருந்தன.

இந்தியா தான் சூப்பர்...

இந்தியா தான் சூப்பர்...

இந்திய பணியாளர்களே ஆசியாவில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், 70 சதவிகிதம் பேர் சவால்களோடும், ஊக்கத்தோடும் நன்கு வழி நடத்தப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நெதர்லாந்து நிறுவனம்

நெதர்லாந்து நிறுவனம்

ஆய்வு மேற்கொண்ட நெதர்லாந்தை சேர்ந்த இந்த நிறுவனம், 14,000 பணியாளர்கள் மற்றும் வல்லுனர்களோடு சிங்கப்பூர், மலேசியா, ஹாங்க் காங்க், சீனா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆதிய நாடுகளில் இயங்குகிறது.

வொர்க் லைப் பேலன்ஸ்...
 

வொர்க் லைப் பேலன்ஸ்...

சிங்கப்பூர் வாசிகள் தற்போது தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்கை சமநிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வினை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் பேரால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இது சமீபத்திய ஆய்வில் 50 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது.

55% நிறுவனங்கள்

55% நிறுவனங்கள்

55 சதவிகித நிறுவனங்கள் தகுந்த வொர்க் லைப் பேலன்ஸ் செயல்முறையை உருவாக்குவதில் தாங்கள் சராசரியாகவோ அல்லது மோசமாகவோ இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

சவாலான பணியாளர்கள்

சவாலான பணியாளர்கள்

71 சதவிகித நிறுவனங்கள், பல்வேறு வயதுகளில் உள்ள தங்கள் பணியாளர்களை நிர்வகிப்பது பெரும் சவாலாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

காசு தான் முக்கியம்..

காசு தான் முக்கியம்..

இந்த ஆய்வு சிங்கப்பூர் வாசிகள் தங்கள் பங்களிப்புகளுக்குக் கிடைக்கும் ஊக்கம், முக்கியம் என்று கருதினாலும், ஊதிய எதிர்பார்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்தனர் என்று தெரிவிக்கிறது.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

சிங்கப்பூர் பணியாளர்களில் 59 சதவிகிதம் பேர் கடந்த வருடம் ஊதிய உயர்வைப் பெற்றதாகவும், 67 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் 5 சதவிகித ஊதிய உயர்வை அடுத்த வருடம் எதிர்பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அரசின் மெத்தனம்..

அரசின் மெத்தனம்..

சிங்கப்பூரின் நீண்ட நாள் ஆட்சி செய்யும் அரசு, மக்களின் கோபத்திற்க்கு ஆளாகி சமீபத்திய தேர்தலில் எதிர்கொண்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்தவும், அன்னியர்களுக்கான வேலை வாய்ப்புகளை இறுக்கவும் முயன்றுவருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sullen in Singapore: Its workers are the unhappiest in Asia

Workers in wealthy Singapore are the unhappiest in Asia and nearly two-thirds would like to quit their jobs in the next year, a regional survey by recruiting firm Randstad Group.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X