2014ஆம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை தொடும்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொருளாதார மந்த நிலை மற்றும் தொழிற் பெருக்கத்தில் காணப்படும் தேக்கம் ஆகியவை வேலைவாய்ப்புகளை மங்க வைப்பதாகவும் இதனால் இந்தியாவில் வேலையற்றோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலக தொழிலாளர் அமைப்பு (ILO), நாட்டின் வேலை வாய்ப்புகளின் மந்த நிலையைச் சுட்டிக்காட்டி கடந்த இரண்டாண்டுகளில் வேலையின்மை நிலை உயர்ந்துவருவதாக தன்னுடைய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அமைப்பு அளித்துள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் கணிப்பின்படி, இந்த வருடம் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 3.8 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றன.

குடிபெயர்தல்

குடிபெயர்தல்

மஹிந்த்ரா குழும நிறுவனமான பிரிஸ்டில்கோன் நிறுவனத்தின் மனிதவளம் மற்றும் திறமைகள் மேலாண்மைத் துறை துணைத்தலைவர் ரிது மெஹோடத்ரா கூறுகையில், மக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்வதால் இங்கு வேலையின்மை நிலை உயர்ந்துவருகிறது என்றார்.

அரசின் உள்ளீடு அவசியம்

அரசின் உள்ளீடு அவசியம்

"வேலைவாய்ப்புகள் மற்றும் தகுதியான பணியாளர் இருப்பு ஆகியவற்றுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வருவதன் மூலம் நீண்டகால வேலையின்மை நிலையை சரிசெய்யமுடியும்" என அவர் பிடிஐ செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

வேலைக்கேற்ற ஊதியம்..

வேலைக்கேற்ற ஊதியம்..

அமைப்புசாரா மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகளில் மிகவும் குறைந்த ஊதியத்திற்கும் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யவும் நிர்பந்த்திக்கப்படுவதால் தெற்காசியாவில் வேலைவாய்ப்புகள் நெருக்கடிக்குள்ளகியுள்ளன என உலக தொழிலாளர் அமைப்பு ஆய்வரிக்கை கூறுகிறது.

வேலைவாய்பின்மை அதிகரிப்பு..

வேலைவாய்பின்மை அதிகரிப்பு..

இந்தியாவின் வேலைவாய்ப்பு விகிதம் 2011 ஆம் ஆண்டு முதல் உயர்ந்து கொண்டிருப்பதாகவும், அப்போதிருந்த 3.5% விகிதத்திலிருந்து உயர்ந்து 2012 ஆம் ஆண்டில் 3.6 சதவிகிதமாகவும் 2013 ஆம் ஆண்டில் 3.7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டில் உச்சத்தை தொடும்..

2014ஆம் ஆண்டில் உச்சத்தை தொடும்..

இந்த வருடம் வேலையின்மை 3.8 சதவிகித்தை எட்டும் என 2014ஆம் ஆண்டின் உலக வேலைவாய்ப்பு நிலையறிக்கை தெரிவிக்கிறது.

5 வருடத்தில் 11 லட்சம் வேலைவாய்ப்புகள்

5 வருடத்தில் 11 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்த உலக தொழிலாளர் அமைப்பின் அறிக்கை இந்தியாவின் வேலையின்மை நிலை அதிகரித்து வருகிறது எனவும் இது 2004-05 ஆம் ஆண்டிலிருந்து 2009-10 வரையிலான காலத்தில் 11 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே எட்டியிருப்பதிலிருந்து தெரியவருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unemployment levels rising in India: ILO report

The count of people being without a job is on the rise in India as economic slowdown and slower business expansion activities cast a shadow on employment generation, say experts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X