5ஆண்டு ஒப்பந்தத்துடன் புதிய இயக்குநராக பதவி உயர்வு பிரவீன் ராவ்!! இன்போசிஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸில் புதிதாக சேர்க்கப்பட்ட தலைவரான யு.பி.பிரவீன் ராவ் அவர்களை, அந்நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் 2019-ம் ஆண்டு வரை முழு நேர இயக்குநராக நியமித்துள்ளனர். இம்மாத துவக்கத்தில், இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் நிறுவனத்தில் திரு.பி.ஜி.ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் சேர்ந்து, திரு.யு.பி.பிரவீன் ராவ் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

 

இப்பொழுது யு.பி.பிரவீன் ராவ் அவர்கள் சில்லறை வர்த்தகம், நுகர்வோர்களுக்கான பேக்கேஜ்ட் பொருட்கள் மற்றும் போக்குவரத்து, வாழ்கை அறிவியல்கள், வளங்கள் மற்றும் பயன்பாடுகள், சேவைகள், வளர்ச்சி சந்தைகள், கிளெவுட் மற்றும் மோபிலிட்டி, தரம் மற்றும் உற்பத்தி திறன் மற்றும் இன்போசிஸ் தலைமைத்திறன் நிறுவனம் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.

ரூ.53 லட்சம் சம்பளம்

ரூ.53 லட்சம் சம்பளம்

5 ஆண்டுகளுக்கு முழு நேர இயக்குநராக இருக்கப் போகும் திரு.இராவ் அவர்கள் வருடாந்திர ஊதியமாக ரூ.53 லட்சமும், செயல்பாட்டைப் பொறுத்தும், நீண்ட நாட்களுக்கான போனஸ் மற்றும் படிகளையும் பெறுவார்.

5 ஆண்டுகள்

5 ஆண்டுகள்

'ஜனவரி 10, 2014 தொடங்கி ஜனவரி 9, 2019 வரையிலான 5 ஆண்டுகள், போர்டு ஆஃப் டைரக்டர்களின் ஓய்வு பெறும் விதிமுறைகளுக்கு உட்பட்டது' என்று மும்பை பங்குச் சந்தையில் பதிவிடுகையில் திரு.இராவ் குறிப்பிட்டார்.

20% போனஸ்
 

20% போனஸ்

ரூ.4.48 இலட்சத்தை ரூ.4.45 முதல் ரூ.8 இலட்சம் வரையிலான அளவுகளில் மாத ஊதியமாக அவர் பெறுவார் என்றும் தெரிவித்தார். திரு.இராவ் அவர்கள் அதிகபட்சம் 20 சதவிகித போனஸிற்கு தகுதியானவர், மற்றும் அது போர்டு உறுப்பினர்களின் முடிவிற்கேற்ப தகுந்த இடைவெளிகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதர போனஸ்

இதர போனஸ்

செயல்திறனுக்கான போனஸ் மற்றும் நெடுநாட்கள் பணி செய்வதற்கான போனஸ் ஆகியவற்றையும் கூட போர்டு உறுப்பினர்களின் முடிவின் பேரில் தகுந்த இடைவெளிகளில் பெறுவார்.திரு.ஸ்ரீநிவாஸ் உலகளாவிய சந்தைகளை கவனிக்கும் வேளையில், பெங்களூரிலிருந்து இயங்கி வரும் திரு.ராவ் உலகளாவிய விநியோகம் மற்றும் சேவை புதுமைகளை கவனித்து வருவார்.

சிஇஒ சிபுலால் ஓய்வு..

சிஇஒ சிபுலால் ஓய்வு..

2014-ம் ஆண்டு ஓய்வு பெறப் போகும் இன்போசிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், மேலாண் இயக்குநருமான திரு.எஸ்.டி.சிபுலால் அவர்களுக்கு மாற்றாக, வேறொருவரை தேர்ந்தெடுக்கும் வகையிலேயே திரு.ஸ்ரீநிவாஸ் மற்றும் திரு.ராவ் ஆகியோர் வளர்க்கப்பட்டு வருகின்றனர் என்று இன்போசிஸ் நிறுவனத்தை கூர்ந்து கவனிப்பவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys elevates Pravin Rao as whole-time director

IT services major Infosys today said it has elevated its newly appointed President U B Pravin Rao as a whole-time Director in the company's Board till 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X