நிதி அமைச்சகத்தின் இ-மெயிலை ஹேக் செய்த முகவரி திருடன்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரின் மின்னஞ்சல் கணக்கை முடக்கி அத்துமீறி நுழைந்து, அதன் வழியாக மின்னஞ்சல் அனுப்பி பணம் கேட்கின்றனர். இந்த செயல் இங்கிலாந்து நாட்டில் இருந்து செய்திருப்பதாக தகவல் தெரிகிறது.

"நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது, இது லண்டன் பகுதியை சார்ந்த சில வலைதள திருடர்கள் செய்கின்றனர், எனவே இந்த முகவரியிலிருந்து பணம் கேட்டு வரும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது," என்று நிதி அமைச்சக செய்தி தொடர்பாளர் மற்றும் கூடுதல் இயக்குனர் ஜெனரல் (ஊடகம் & தகவல் தொடர்பு) D.S.மாலிக் கூறியுள்ளார்.

நிதி உதவி

நிதி உதவி

நம் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்கிலிருந்து மின்னஞ்சல் அனுப்பும் அந்த நபர் மாலிக் பிரச்சனையில் உள்ளார் என்றும், அவருக்கு அவசரமாக நிதியுதவி தேவைப்படுகிறது என்றும் கூறி, 1,500 பவுண்ட் கேட்டுள்ளார்.

1,500 பவுண்ட் வேண்டும்

1,500 பவுண்ட் வேண்டும்

"நான் லண்டனில் உள்ளேன். அவசரமாக உங்கள் உதவி தேவைப்படுகிறது. தயவு செய்து 1,500 பவுண்ட் அனுப்பிவைக்கவும், இங்கு என் நடவடிக்கைகளை முடிக்க உதவுங்கள். எனக்கு பணம் கிடைத்த உடனேயே உங்கள் பணத்தை திருப்பி தந்து விடுவேன். வெஸ்டர்ன் யூனியன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் பணத்தை அனுப்பி வையுங்கள்," என்று அந்த நபர் பத்திரியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

முகவரி கொடுத்த திருடன்

முகவரி கொடுத்த திருடன்

அந்த நபர் தன் முகவரியை -- 191 கிங்க்ஸ்டன் ரோடு லண்டன், எஸ்டபள்யு19 14ஹெச், யுனைடட் கிங்டம், என்று தெரிவித்துள்ளார்.

திரு.மாலிக்

திரு.மாலிக்

டெல்லியில் இருக்கும் மாலிக் இதுபற்றி கூறகையில் என் கணக்கை யாரோ அத்துமீறி பயன்படுத்தி, மக்களை தன் வலையில் சிக்க வைக்க ஒரு திருடனோ அல்லது திருட்டு கூட்டம் முயல்கிறது என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Email account of Finance Ministry spokesperson hacked

The email account of Finance Ministry spokesperson has been hacked by someone purportedly in United Kingdom who is sending mails and asking for money. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X