இதுல கூட வருமான வரியை சேமிக்கலாமா?? வெரைட்டியான ஐடியா..

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அதிகமாக சம்பளம் வாங்கும் உயர் அதிகாரியாக இருந்தாலும் சரி, குறைவாக சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தாலும் சரி, எந்த காரணத்திற்காகவும், கட்ட வேண்டிய வரி கடப்பாடுகளை ஒதுக்க முடியாது.

வரி கடப்பாடுகளுக்கு இணங்க நாம் செலுத்தும் வரிப் பணத்தை பெருமளவில் மிச்சப்படுத்த பல வழிகள் இருக்கிறது. வரி தொகையை குறைப்பதற்கான 8 வழிகளை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். படித்து பயன்படுத்தி நன்மை அடையவும்.

குத்தகைக் கார்..

குத்தகைக் கார்..

நீங்கள் புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அத்திட்டத்தை கை விடுங்கள். புது கார் வாங்கும் போது கையில் இருக்கும் பணம் பெருமளவில் குறையும். ஆனால் அப்படி செய்யாமலே கைக்கு காரும் வந்து, வரி மீட்பு கிடைக்கவும் வழி உள்ளது. புது கார் வாங்குவதற்கு பதில், உங்கள் சம்பள அமைப்பை பொறுத்து, ஒரு காரை குத்தகைக்கு தரும் படி உங்கள் நிறுவனத்திடம் கேட்கலாம். குத்தைக்கு வாங்கிய கார் என்றால் வரி மீட்புக்கு உட்பட்டது. ஆனால் அது காரின் மதிப்பை பொருத்தும் அமையும். உதாரணத்திற்கு, காரின் விலை 8 லட்சம் என்றால், வருடத்திற்கு 28,800 ரூபாய் வரி சலுகையாக கிடைக்கும். இதனால் 30 சதவீத வரிப்பாளத்தின் கீழ், 2.4 லட்ச ரூபாய் வரியை சேமிக்கலாம்.

கணிப்பொறி, மடிக்கணினி

கணிப்பொறி, மடிக்கணினி

உங்கள் நிறுவனம் உங்களுக்கு கணிப்பொறி, மடிக்கணினி அல்லது டேப்லெட் போன்றவற்றை வேலை விஷயமாக பயன்படுத்தவும் சொந்த விஷயமாக பயன்படுத்தவும் கொடுத்திருக்கிறது என்றால், அதன் அசல் தொகையிலிருந்து 10 சதவீதம் வரி சலுகை கிடைக்கும். மடிக்கணினியின் விலை 60,000 ருபாய் என்றால் சலுகையாக 6,000 ரூபாய் கிடைக்கும். இதனால் 30 சதவீத வரிப்பாளத்தின் கீழ், 16,686 ரூபாய் வரியை சேமிக்கலாம்.

காருக்கு ஓட்டுனர் யார்?

காருக்கு ஓட்டுனர் யார்?

குத்தகைக்கு கார் வாங்கும் அதே ஐடியாவை தான், அதற்கு ஓட்டுனர் நியமிப்பதிலும் பின்பற்ற வேண்டும். நீங்களாகவே காருக்கு ஓட்டுனரை நியமித்தால், உங்கள் நிகர சம்பளத்தில் இருந்து தான் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். நிகர சம்பளம் என்பது வரி கட்டிய பின் கிடைக்கும் தொகையாகும். அதனால் நிறுவனத்தையே ஓட்டுனரை நியமிக்க சொல்லலாம். உதாரணத்திற்கு, ஓட்டுனரின் மாத சம்பளம் 10,000 ரூபாய் என்றால், அதனால் கிடைக்கும் மாதாந்திர வரி சலுகை 900 ரூபாய் ஆகும். இதனால் 30 சதவீத வரிப்பாளத்தின் கீழ், 33,750 ரூபாயை சேமிக்கலாம்.

பணி ஓய்வு சேமிப்பு

பணி ஓய்வு சேமிப்பு

உங்கள் பணி ஓய்வுக்கான சேமிப்புகளை நீங்கள் பணியில் சேரும் காலத்திலிருந்தே செய்ய வேண்டும் என்று உங்கள் நிதி ஆலோசகர்கள் பரிந்துரைத்திருப்பார்கள். அதனை பலர் கடைப்பிடிக்காமல் விட்டிருப்போம். ஆனால் பணி ஓய்வு சேமிப்பு மிகவும் அவசியம். அது உங்கள் வருங்காலத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் வரியையும் குறைக்கும். உங்கள் சார்பில், உங்கள் நிறுவனத்தை NPS-ல் முதலீடு செய்ய சொல்லுங்கள். NPS-ல் முதலீடு செய்தால், பிரிவு 80CCD(2)-இன் கீழ், உங்கள் அடிப்படை சம்பளத்திலிருந்து 10 சதவீதம் முழுமையாக கழிக்கப்படும். உதாரணத்திற்கு, உங்கள் நிறுவனம் மாதம் 40,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் 4,000 ரூபாய் வரிச் சலுகையாக கிடைக்கும். இதனால் 20 சதவீத வரிப்பாளத்தின் கீழ், 14,832 ரூபாயை சேமிக்கலாம்.

வீட்டுக்கடனை தேர்ந்தெடுங்கள்

வீட்டுக்கடனை தேர்ந்தெடுங்கள்

புது சொத்துகளை வாங்க யோசனையா, பணத்தை வேறு எதிலாவது முதலீடு செய்வதற்கு பதில், வீட்டுக்கடனை தேர்ந்தெடுங்கள். அது உங்கள் சொத்து மதிப்பை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் வரி கடப்பாட்டை குறைக்கவும் உதவும். வீட்டுக்கடனை தேர்ந்தெடுத்து வீட்டை வாங்கி, பின் அதை வாடகைக்கு விட்டால், உங்கள் வாடகை வருவாயில் 70 சதவீதத்திற்கு மட்டுமே வரி போடப்படும். ஆனால், வீட்டுக்கடனுக்காக நீங்கள் கட்டும் கடனுக்கு எல்லையற்ற வரி விலக்கு கிடைக்கும்.

படித்தால் வரி குறையும்.. என்ன புரியவில்லையா??

படித்தால் வரி குறையும்.. என்ன புரியவில்லையா??

நம்மில் பலரும் கல்லூரி படிப்பை முடித்த உடனேயே வேலையில் சேர்ந்து விடுவோம். மேற்படிப்பை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. பரவாயில்லை, இப்போது யோசிக்கலாம். இதனால் உங்கள் வரியும் குறையும். குறைந்த கால தொழில் ரீதியான பயிற்சியை நீங்கள் பெற, சில நிறுவனங்களே செலவு செய்கிறது. உங்கள் நிறுவனம் உங்களுக்கு 80,000 செலவு செய்தால், வரிச்சலுகையாக 8,000 ரூபாய் கிடைக்கும். இதனால் 30 சதவீத வரிப்பாளத்தின் கீழ், 22,250 ரூபாயை சேமிக்கலாம்.

அதுல கூட வரி சேமிக்கலாமா??

அதுல கூட வரி சேமிக்கலாமா??

ஆம்... புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைப்பேசி கட்டணங்கள் கூட உங்கள் வரித் தொகையை குறைக்க உதவும். அதற்கு இவை அனைத்தையும் உங்கள் சம்பள அமைப்பில் சேர்த்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைப்பேசி கட்டணத்திற்கு, நீங்கள் மாதம் 5,000 ரூபாய் செலவு செய்தால், 30 சதவீத வரிப்பாளத்தின் கீழ், 18,540 ரூபாயை சேமிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் சம்பள அமைப்பில் இவை அனைத்தையும் உங்கள் நிறுவனத்தை சேர்க்க சொல்ல வேண்டும்.

உணவு மற்றும் பரிசு கூப்பன்கள்

உணவு மற்றும் பரிசு கூப்பன்கள்

பல நிறுவனங்கள் சொடக்சோ கூப்பன்கள் போன்ற உணவு மற்றும் பரிசு கூப்பன்களை வழங்குகிறது. உணவகங்கள் மற்றும் சில்லறை கடைகளில், காசு கொடுப்பதற்கு பதில் இந்த கூப்பன்களை கொடுக்கலாம். இந்த கூப்பன்களும் கூட வரி விலக்கை பெற உதவுகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் 2,600 மதிப்பிலான உணவு கூப்பன்களை பயன்படுத்தினால், 30 சதவீத வரிப்பாளத்தின் கீழ், 9,640 ரூபாயை சேமிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Ways Salary Hike Affects Your Tax Redemptions

As the season of assessment is on many of you must be expecting hikes in your salary, there is something else you shouldn’t forget among all the celebrations, i.e. is your tax obligations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X