ஆன்லைன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இந்தியர்களுக்கு மிகவும் குறைவு!! மைக்ரோசாப்ட்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்டெர்நெட் உபயோகிக்கும் இந்தியர்களுள் 20 சதவீத மக்கள் ஆன்லைன் ஃபிஷிங் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதும், இவர்களுள் 12 சதவீதம் பேர் சராசரியாக தலா 7,500 ரூபாய் விலையுடன் கூடிய அடையாள திருட்டினால் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்பதும் கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட மூன்றாவது வருடாந்திர மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டிங் ஸேஃப்டி இன்டெக்ஸின் மூலம் அறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சரியான விழிப்புணர்வு இல்லாமையே காரணம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் வருடந்தோறும் ஃபிஷிங் மற்றும் இதர அடையாள திருட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்பு, சுமார் 5 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளதாகவும், மக்களின் ஆன்லைன் வர்த்தக பரிமாற்றங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை சீர் செய்வதற்கான செலவு இதைக் காட்டிலும் அதிகமாக அதாவது, ஏறத்தாழ 6 பில்லியன் டாலராக அல்லது சராசரியாக இழப்பு ஒன்றுக்கு 632 டாலர் என்று கணிக்கப்பட்டுள்ளதான அளவில் இருப்பதாகவும் இந்த எம்சிஎஸ்ஐ சர்வே கூறுகிறது.

நுகர்வோரிடம் இதற்கு முந்தைய 12 மாதங்களில் அவர்களுக்கு ஆன்லைனில் ஏற்பட்ட அனுபவங்களை பகிரச் சொல்லி கேட்டுக்கொண்டு, 2013 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டதான இந்த எம்சிஎஸ்ஐ சர்வே, 20 நாடுகளில் உள்ள சுமார் 10,500 நுகர்வோரின் ஆன்லைன் பாதுகாப்பு நடத்தைகளை அளவீடு செய்துள்ளது.

 20 நாடுகள்

20 நாடுகள்

இந்த கருத்து கணிப்பில் கலந்து கொண்ட 20 நாடுகளும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன: ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேஸில், கனடா, சீனா, எகிப்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், மலேஷியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சிங்கப்பூர், ஸ்பெயின், தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க.

சமுக வளைதளம்

சமுக வளைதளம்

எச்சரிக்கையளிக்கும் விதமாக, உலகெங்கிலும் சுமார் பதிலளித்தவர்களில் 34 சதவீத மக்கள் மட்டுமே சமுக வளைதளங்களில் அந்நியர்கள் பார்க்கக் கூடியவைகளையும், ஆன்லைனில் தங்களைப் பற்றி இடம்பெறக்கூடிய தகவல்களையும் வரையறுத்துள்ளதாகவும், 38% பேர் தங்களின் சோஷியல் நெட்வொர்க் பிரைவஸி செட்டிங்குகளை அட்ஜஸ்ட் செய்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளதாகவும் இந்த சர்வே தெரிவித்துள்ளது.

மொபைல் பாங்கிங்

மொபைல் பாங்கிங்

மேலும் சுமார் 35% பயனர்கள் மட்டுமே பின் நம்பர் (பர்ஸனல் ஐடன்ட்டிஃபிகேஷன் நம்பர்) அல்லது பாஸ்வேர்டு ஒன்றை உபயோகப்படுத்தி தங்களின் மொபைல் சாதனங்களை லாக் செய்து வைத்துள்ளதையும் இந்த சர்வே கண்டறிந்துள்ளது.

ஆன்லைனில் பாதுகாப்பு

ஆன்லைனில் பாதுகாப்பு

ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்பட உதவக்கூடியவை என்று பரிந்துரைக்கப்பட்டதான சுமார் ஏழு நன்னடத்தை வழிமுறைகளுள் இந்திய மக்கள் சராசரியாக மூன்று வழிமுறைகளை மட்டுமே கடைபிடித்து வந்துள்ளதாகவும்.

தொழில்நுட்ப சாதனங்கள்

தொழில்நுட்ப சாதனங்கள்

ஆன்லைன் உபயோகத்துக்கென உள்ள மொத்தம் 12 தொழில்நுட்ப சாதனங்களுள் சுமார் 3.2 சாதனங்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளதாகவும் இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

இன்டர்நெட்

இன்டர்நெட்

"நமக்கு பிரியமானவர்களுடன் தொடர்பு கொள்வது, வேலை, ஷாப்பிங் மற்றும் பல்வேறு கட்டணங்களை செலுத்துவது போன்று ஏதாவதொரு வகையில் இன்டெர்நெட் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது," என்று மைக்ரோசாப்ட் கார்ப் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்டின் தேசிய தொழில்நுட்ப அதிகாரியான பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft survey finds 20% of Indians are victims of phishing attacks

20% of Indians using the Internet were victims of online phishing attacks and 12% of them suffered identity theft at an average cost of Rs.7,500 each, according to the third annual Microsoft Computing Safety Index (MCSI) released on Tuesday. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X