சிஇஒ ராஜினாமா!! நிதி நெருக்கடி!! என்ன செய்ய போறிங்க விஜய் மல்லையா

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிறுவந்திலுள்ள மூத்த அதிகாரிகளில் அவரே கடைசி நபர் ஆவார். அவரது ராஜினாமா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பின்னடைவாக அமையும் என்றும், யூபி குழுமம் மற்றும் கிங்பிஷர் நிறுவனத்தை சார்ந்த இரு நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

அகர்வால் ராஜினாமாவிற்கான தனது ஆவணங்களை சமர்பித்துள்ளார். நிர்வாகம் அவரது ராஜினாமாவை ஏற்று கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த இரு நிர்வாகிகளில் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் தாங்கள் யாரென்று அடையாளப்படுத்தப்படுவதை மறுத்துவிட்டனர்.

கிங்பிஷர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யூபி குழுமம் ஆகிய இரு நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அகர்வாலின் வெளியேற்றத்தை அடுத்து கிங்பிஷர் ஏர்லைன்சின் தலைமை நிதி அதிகாரியும், யூபி குழுமத்தை சார்ந்தவருமான ஏ.ரகுநாதன் நிறுவனத்தில் மூத்த பொறுப்பில் உள்ளார்.

ஸ்பைஸ் ஜெட் டூ கிங்பிஷர்

ஸ்பைஸ் ஜெட் டூ கிங்பிஷர்

குறைந்த கட்டண சேவையை வழங்கும் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய அகர்வால், செப் 30 2010இல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

சன்டிவி கலாநிதி மாறன்..

சன்டிவி கலாநிதி மாறன்..

ஸ்பைஸ் ஜெட்- ன் தலைமை நிர்வாக அதிகாரியாக, குறைந்த கட்டண ஏர்லைன்ஸ் நிறுவனத்தைலாபகரமாக நிர்வகித்து வந்தார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை சன் டிவி கலா நிதி மாறன் வாங்கிய பின் ஜூன் 2010 - ல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

அமெரிக்க ஏர்வேஸ்
 

அமெரிக்க ஏர்வேஸ்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் இணையும் முன் உலகின் இரண்டாவது பெரிய ஜெட் சேவை வழங்குனரான ப்லைட் ஆப்ஷன் நிறுவனத்தில் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றினார். அமெரிக்க ஏர்வேஸ் நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அந்த தெய்வமே நீங்க தான் சார்..

அந்த தெய்வமே நீங்க தான் சார்..

கிங்பிஷர் நிறுவனத்தினை நட்டத்தினை சரி செய்யும் பொருட்டு மல்லையா, அகர்வாலை நிறுவனத்திற்குள் அழைத்து வந்தார்.

விஜய் மல்லையாவின் நம்பிக்கை..

விஜய் மல்லையாவின் நம்பிக்கை..

கிங்பிஷர் நிறுவனத்தை நட்டத்திலிருந்து மீட்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ள விஜய் மல்லயா வல்லமை படைத்த முதலீட்டாளர்களிடையே பேச்சு நடத்த உள்ளார் என்கிறார் சுதர்சன்.

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

ஒரு வேளை மல்லயா கிங்பிஷர் நிறுவனத்தை பல பயணிகள் விரும்பும் வண்ணம்,அதே பிராண்ட் பெயருடன்,வேறு இருப்பு நிலை குறிப்பை கொண்டு மீண்டும் தொடங்கலாம் என்று சுதர்சன் கூறினார்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kingfisher Airlines CEO Sanjay Aggarwal quits

Kingfisher Airlines Ltd’s chief executive officer (CEO) Sanjay Aggarwal has resigned, two company executives said, making him the last of the senior management executives from outside the UB Group to quit the grounded airline.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X