26,598 மோசடி வழக்குகளின் மூலம் ரூ17,284 கோடி இழப்பு!! இந்திய வங்கித்துறை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி, இந்திய வங்கிகள் மோசடியின் காரணமாக கடந்த நிதியாண்டை விட நான்கு மடங்கு அதிக தொகையான ரூ.17,284 கோடி ரூபாயை இழந்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.

பெருகி வரும் செயல்படாத சொத்துக்களின் காரணமாக கடன் கொடுத்த வங்கிகள் தடுமாறிய வருகிறது இதனால் 62 வங்கிகள் 26,598 மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளன. அதன் படி மோசடி தொகையின் மொத்த மதிப்பு3 வருடத்திற்கான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் செலவிற்கான பட்ஜெட் தொகைக்கு சமமானதாகும். (என்ன கொடும சார் இது!! கல்வி கடனை போன் போட்டு, வீட்டிற்கு நோட்டிஸ் அனுப்பி தடாலடியாக கேட்கிறது வங்கி. இதை என்ன செய்யபோகுதாம் வருடக்கணக்கில் வழக்கை நடத்தும்..)

ரூ.4,448 கோடி இழப்பு

ரூ.4,448 கோடி இழப்பு

பெரும்பாலான வழக்குகளை சிபிஐ அல்லது மாநில காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்குகளில் 75% தனியார் வங்கிகளால் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அந்த வங்கிகள் இழக்கும் மோசடி தொகையின் மொத்த மதிப்பு ரூ 970 கோடி ஆகும். அதே நேரத்தில் மாநில வங்கிகள் ரூ16,314 கோடியை இழக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது 2011-12இல் அனைத்து வங்கிகளும் மோசடியின் காரணமாக இழந்துள்ள மொத்த தொகை ரூ4,448 கோடி ஆகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பலத்தை அடி

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பலத்தை அடி

ஆர்டிஐ-யின் தகவிலின் படி பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக பாதிப்படைந்துள்ளது. இந்த வங்கி மொத்தம் 13,75 கோடி தொகையினாலான மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளது. கனரா வாங்கி இழந்த தொகை ரூ1,166 கோடி ஆகும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட மற்ற பொது துறை வங்கிகள் ரூ1,000 கோடிக்கு அதிகமான இழப்பினை சந்தித்துள்ளன.

தனியார் வங்கியின் நிலை
 

தனியார் வங்கியின் நிலை

தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கி 5,280 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து சிட்டி பேங்க் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் முறையே 2,934 மற்றும் 2,568 வழக்குகளை பதிவு செய்துள்ளன. இந்த மூன்று வங்கிகளும் இழந்துள்ள மொத்த மதிப்பு ரூ187 கோடி ஆகும்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்பிஐ வழங்கியுள்ள புள்ளி விபரங்கள் குறித்து பல வங்கிகள் விவாதித்து வருகின்றன.

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கியின் செய்தி தொடர்பாளர் 78 வழக்குகளின் மூலம் ரூ583 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.

சென்ட்ரல் பேங்க்

சென்ட்ரல் பேங்க்

சென்ட்ரல் பேங்க் 156 வழக்குகளில் இழந்த தொகையின் மொத்த மதிப்பு 1,666 கோடி. (சின்ன கல்லு பெத்த லாபம், குறைந்த வழக்கு நிறைய நஷ்டம்)

ஸ்டாண்டர்ட் சார்டர்ட்

ஸ்டாண்டர்ட் சார்டர்ட்

ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி ரூ18.85 கோடி ரூபாயை 1,284 மோசடி வழக்குகளில் இழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஒன்றும் விதிவிளக்கல்ல..

ரிசர்வ் வங்கி ஒன்றும் விதிவிளக்கல்ல..

ஆர்பிஐ 2,568 மோசடி வழக்குகளில் ரூ.37 கோடி ரூபாயை இழந்துள்ளதாக தெரிவிக்கிறது. இந்த தகவலை சிட்டி பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை ஏற்று கொள்ளவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian banks lose Rs 17,284 cr in fraud cases, reveals RTI

Indian banks lost as much as Rs 17,284 crore during 2012-13 due to fraud, in a near four-fold jump over the previous fiscal, ET has found out from information obtained through Right to Information Act.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X