பச்சை குத்த கூட வரி செலுத்த வேண்டுமா..? என்ன கொடுமை சரவணன் இது..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமான வரி, விற்பனை வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என ஏதோ ஒரு வடிவில் நாம் வரியை செலுத்துகிறோம். வரி செலுத்துவது ஒரு குடிமகனுடைய வாழ்கையின் பிரிக்க முடியாத ஒன்று.

 

ஒவ்வொரு மனிதனும் அரசிற்கு எதேனும் ஒரு வழியில் வரி செலுத்திக் கொண்டு தான் இருக்கிறான். பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் கூறியதைப் போல "மரணமும் வரியும் தவிர எதுவும் நிச்சயமில்லை" என்ற வாக்கு இன்றைக்கும் உண்மையாக உள்ளது.

வருமான வரி, சொத்துவரி மற்றும் வணிக வரி போன்றவை எல்லாம் நமக்கு நன்றாகவே தெரிந்தவைதான். ஆனால் இங்கு உலகில் தற்போது நடைமுறையில் இருக்கும் சில விசித்திரமான வரிகள் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம்.

கட்டாய புகைப்பிடித்தல் வரி

கட்டாய புகைப்பிடித்தல் வரி

ஏறக்குறைய எல்லா நாடுகளும் சிகரெட்டுகளுக்கு குறிப்பிட்ட வரியை விதிக்கின்றன. ஆனால் சீனாவில் மட்டும்தான் வருவாயைப் பெருக்க அரசு மக்களை அப்பட்டமாக சிகரெட்டுகளை வாங்கவும் புகைக்கவும் கட்டாயப்படுத்துகிறது.

உண்மையில், சீன அரசு நெருக்கடியான நேரங்களில் வருவாயைப் அதிகரிக்க மக்களை 2.5 லட்சம் பாக்கெட் சிகரெட்டுகளை வாங்கி புகைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. "ஆசிரியர்கள் புகைக்க ஒரு ஒதுக்கீட்டைப் பள்ளிகளுக்கும் கொடுத்துள்ளது. மேலும் சீனாவின் ஒரு கிராமத்தில் அரசு அலுவலர்களுக்கு 400 பெட்டி சிகரெட்டுகளைக் கண்டிப்பாக வாங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது" என பில்ஷிரிங்க் தெரிவித்துள்ளது. (நீங்க எல்லாம் நல்லா வருவிங்க... )

 

பச்சைக் குத்த வரி

பச்சைக் குத்த வரி

நாம் என்ன வாங்கினாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி செலுத்துவோம். 2005 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் அர்க்கான்சாஸ் மாகாணத்தில் டாட்டூ அல்லது பச்சைக் குத்த 6 சதவிகித வரி செலுத்தவேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த டாட்டூ வரி "டர்போ டாக்ஸ்" எனப்படும் வரியின் கீழ் வருவதோடு மிகவும் வித்தியாசமான வரியாகக் கருதப்படுகிறது.

புளூபெர்ரி வரி
 

புளூபெர்ரி வரி

புளூபெர்ரி என்ற ஒரு வகைப் பழத்தைப் பயிரிடவும், வாங்கவும் மற்றும் விற்கவும் வரி போடுவோம் என யாராவது சொன்னால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அப்படி ஒரு வரி இருக்கிறது. கனடாவில் மெய்ன் எனப்படும் இடத்தில் வருடத்திற்கு 7.5 கோடி பவுண்டுகள் அளவிற்கு புளூபெர்ரிப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அடுத்த முறை கனடாவிற்குச் சென்றால், புளூபெர்ரியை வாங்காதீர்கள். வாங்கித்தான் ஆக வேண்டும் என்றால் 25 சதவிகிதம் வரியாக செலுத்தத் தயாராகுங்கள்.

 

கம்பளி கோட் வரி

கம்பளி கோட் வரி

பனிக்காலத்தில் குளிரிலிருந்து காத்துக்கொள்ள கம்பளி ஆடைகளை வாங்கி அணிவது வழக்கம். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் குளிரிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வது சற்று அதிகமாக செலவு பிடிக்கும். ஆமாம், அங்கு ஒரு ஸ்வெட்டர் வாங்க 6.5 சதவிகிதம் அதிக வரியை மக்கள் செலுத்துகிறார்கள். இந்த வரியில், கடைக்காரருடைய லாபம், கையாளுதல் மற்றும் போக்குவரத்து செலவுகள் அடக்கம்.

 தானியங்கி பழ விற்பனை வரி

தானியங்கி பழ விற்பனை வரி

பழங்கள் மனிதர்களுக்கு ஒர் உன்னத பரிசாகும். பழங்களைப் பிடிக்காதவர்கள் வெகு சிலரே. குறிப்பாக கலிஃபோர்னியாவில் பழங்களை தங்கள் வாழ்கையின் ஒரு அங்கமாக அங்குள்ள மக்கள் கருதுகின்றனர்.

இதனாலேயோ என்னவோ அங்குள்ள அரசு பழங்களை தானியங்கி பழ விற்பனை செய்யும் இயந்திரங்களின் மூலமாக விற்கப்படும் பழங்கள் மீது 33 சதவிகித வரியை விதித்து 10 வித்தியாசமான வரிகளில் இடம் பெற்றுள்ளது.

 

பாஜெல் வரி

பாஜெல் வரி

நியூயார்க் நகர நிர்வாகம், அங்குள்ள மக்களின் காலைச் சிற்றுண்டிக்கு 8 சதவிகித வரியை விதிக்கிறது. பாஜெல் எனப்படும் காலை உணவை டாப்பிங்கோடு நீங்கள் வாங்கி அங்கேயே உண்ண விரும்பினால் நீங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த வரியை நீங்கள் செலுத்த விரும்பவில்லையென்றால் அதை வாங்கி, வீட்டிற்குக் கொண்டுவந்து சிறிது வெண்ணை சேர்த்து உண்ணலாம்.

வளர்ப்புப் பிராணி வரி (பெட் டாக்ஸ்)

வளர்ப்புப் பிராணி வரி (பெட் டாக்ஸ்)

அமெரிக்கவின் வட கரோலினாவிலுள்ள, துர்ஹம் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு செல்லப் பிராணிகளை சொத்துகளாகக் கருதும் நேரமிது. ஆமாம், அங்கு செல்லப் பிராணி வளர்ப்பவர்கள் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட பிராணிகளுக்கு பத்து டாலர்களும், செய்யப்படாத பிராணிகளுக்கு 75 டாலர்களும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி 4 மாதம் அல்லது அதற்கு மேலான வயதுள்ளப் நாய் அல்லது பூனைகளுக்குப் பொருந்தும்.

 

லஞ்ச வரி (ம்...இதுவுமா?)

லஞ்ச வரி (ம்...இதுவுமா?)

லஞ்சம் சட்ட விரோதமாகக் கருதப்படும் இந்த நாளில், உலகிலேயே தனியார் வர்த்தகங்களில் லஞ்சம் சட்டபூர்வமாக சரியாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஏதாவது லஞ்சத்தில் ஈடுபட்டிருந்தால் அதன் விவரங்களை லஞ்ச சட்டத்தின் படி தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு லஞ்சம் வழங்கியவர்கள் மற்றும் நீங்கள் லஞ்சம் கொடுத்தவர்களின் பெயர்கள் இதில் அடங்கும். இந்த விவரங்களோடு ஒரு கூடுதல் தொகையை வரியாக செலுத்தவேண்டும். இந்தத் தொகை நிறுவன வருமான வரியோடு சேர்க்கப்படும். ஆனால் இந்த முறை இப்போது பயன்பாட்டில் இல்லை. (இது நல்லா இருக்கே!!)

அன்னிய வரி

அன்னிய வரி

1885ஆம் ஆண்டு, சீனாவிலிருந்து கனடாவிற்கு குடி புகுந்த மக்களுக்கு ஒரு வரி 1923ஆம் ஆண்டுவரை விதிக்கப்பட்டு வந்தது. இந்த மக்கள் அவர்களுடைய வருமானம், வங்கி வட்டி வருவாய் மற்றும் பங்காதாய வருவாய் விவரங்களைத் தரவேண்டும். இது சீனர்களைத் தனிமைப்படுத்துவதற்காக அல்ல, இந்த வரி சீனர்களின் வருகையை குறைக்கும் பொருட்டு இத்தகைய வரி நடைமுறையில் இருந்தது.

பிரிட்டிஷ் கலாச்சார வரி

பிரிட்டிஷ் கலாச்சார வரி

தங்கள் கலாச்சார விளையாட்டு மீது வரி விதிக்க அனைத்து நாடுகளும் விரும்புகின்றன. இதில் பிரிட்டிஷ் அரசும் ஒன்று. பிரிட்டனின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட வீடியோ கேம்கள் இதில் அடங்கும். அந்த விளையாட்டின் முதன்மை கதாபாத்திரம் அல்லது அந்தக் கதையை விளக்குபவர் அல்லது அந்தக் கதை பிரிட்டனுடன் தொடர்பு கொண்டதாக இருந்தால் அது இந்த வரியின் கீழ் வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Types of Taxes Which You Have Never Heard Of

All of us pay tax in one form or the other, be it income tax or sales tax. Paying tax has become inseparable part of everyone’s life. Benjamin Franklin rightly said “nothing is certain but death and taxes” and it is true even to this day.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X