லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவைக் கட்டணங்கள் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவைக் கட்டணங்கள் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்!!
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் (BSNL) லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஆகிய சேவைகளுக்கான மாதாந்திர கட்டணத்தை நாடு முழுவதும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

ஒன் இந்தியா திட்டத்திற்கான மாத கட்டணம் 180 -லிருந்து 195 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் -ன் தலைமை போது மேலாளர்(கொல்கத்தா) கவுதம் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

அதே போல குறைந்த பிராட்பேண்ட் பயன்பாடு திட்டத்திற்கான மாதாந்திர முன் நிர்ணயம் செய்யபட்ட கட்டணமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் திட்டங்களை பொறுத்து கட்டணங்கள் ரூ24லிருந்து ரூ 350 வரை திருத்தி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிராட்பேண்ட் திட்டங்களில் ரூ250க்கான திட்டம் ரூ275 எனவும் ரூ600க்கான திட்டம் ரூ630 ஆகவும் திருத்தி அமைக்கப்பட உள்ளது. மேலும் ரூ400 திட்டத்தை ரூ424 ஆகவும் திருத்தி அமைக்கப்பட உள்ளது. ரூ2,799 மற்றும் ரூ3,699 ஆகிய திட்டங்களுக்கான கட்டணம் ரூ200 அதிகப்படுத்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ரூ 4,999 மற்றும் ரூ6,999 ஆகிய திட்டங்கள் முறையே ரூ 250 மற்றும் ரூ350 உயர்வு பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL to hike landline, broadband rentals

India's largest state-owned telecommunications service provider Bharat Sanchar Nigam Limited has decided to increase the landline and broadband monthly tariff from March 1 across the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X