பங்குசந்தையில் களமிறங்கும் ஓய்வூதிய அமைப்பு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பணி ஓய்வு நிதி அமைப்பான எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் ஆர்கனைஸேஷனின் (இபிஎஃப்ஓ) சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான அதன் மூலதனத்தில் ஒரு பகுதியை ஈக்விட்டிக்களில் முதலீடு செய்வதற்கு பல தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அவ்வமைப்பிற்கு பங்குச்சந்தையில் உறுப்பினராவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது நிதி அமைச்சகம்.

 

பொருளாதார விவகாரத் துறை, செக்யூரிட்டீஸ் காண்ட்ராக்ட்ஸ் (ரெகுலேஷன்) சட்டத்தின் படி 1957 சட்டப்பிரிவின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தை ஒன்றில் உறுப்பினராவதற்கு இபிஎஃப்ஓ அமைப்பிற்கு அனுமதி வழங்கக்கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஒரு பத்திரிக்கை வெளியீடு தெரிவிக்கிறது.

செபி

செபி

மார்க்கெட் ரெகுலேட்டரான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி), சந்தையை ஊக்குவிக்கும் விதத்தில் இபிஎஃப்ஓ ஃபண்ட்களை ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களுக்குள் நுழைக்க அரசு வழிவகை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

பங்குச்சந்தை அமைப்புகள்

பங்குச்சந்தை அமைப்புகள்

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்இ) ஆகியவையே முறையான அங்கீகாரம் பெற்ற முக்கியமான இந்தியப் பங்குச்சந்தைகள் ஆகும்.

நிலையற்ற தன்மை

நிலையற்ற தன்மை

இபிஎஃப்ஓ ஃபண்ட்களை ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்து அவற்றின் ஈட்டத்தை பெருக்குவதே நிதி அமைச்சகத்தின் குறிக்கோள் ஆகும். ஆனால், பங்குகளின் நிலையற்ற தன்மையை காரணம் காட்டி பல்வேறு யூனியன்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இபிஎஃப்ஓ, ஈக்விட்டி முதலீட்டை தேர்வு செய்யவில்லை.

நிதி அமைச்சகம்
 

நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகம் 2005ஆம் ஆண்டில் சுமார் 5% நிதிகளை ஈக்விட்டியில் முதலீடு செய்ய இபிஎஃப்ஓவை அனுமதித்ததோடு, 2008 ஆம் ஆண்டில் உச்சவரம்பை சுமார் 15% ஆகவும் உயர்த்தியுள்ளது.

5% முதலீடு

5% முதலீடு

தொழிலாளர் அமைச்சகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் மற்றும் செபியினால் ரெகுலேட் செய்யப்பட்டுள்ள ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட பணச்சந்தை சாதனங்களில் சுமார் 5% ஃபண்ட்களை முதலீடு செய்வதற்கு இபிஎஃப்ஓ அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

8.5% வட்டி

8.5% வட்டி

நாடெங்கிலும் சுமார் 5 கோடிக்கும் மேலான சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இபிஎஃப்ஓ, 2012-13ஆம் ஆண்டின் போது பிஎஃப் டெபாஸிட்கள் மீது சுமார் 8.5% வட்டியை வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் 8.75% வட்டி வழங்கலாம் என்று இபிஎஃப்ஓ டிரஸ்டீக்கள் தீர்மானித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance ministry allows EPFO to become stock exchange member

The finance ministry has allowed retirement fund body Employees’ Provident Fund Organisation (EPFO) to become a member of a stock exchange although its trustees oppose parking even a part of its over Rs5 lakh crore corpus in equities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X