இந்தியாவில் 4ஜி சேவையை மேம்படுத்தும் ஹுவெய்!! 800 மில்லயன் டாலர் வருவாய்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்சிலோனா: சீனாவின் முன்னணி தொலைதொடர்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹுவெய் 2017ஆம் ஆண்டின் முடிவில் தொலைதொடர்பு துறையில் அதன் இந்திய செயல்பாடுகள் வழியாக 2 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டும் வகையில் இலக்கை நிர்ணயம் செய்து செயல்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

'இந்த இலக்கை எட்டும் வகையில் எங்களது செயல்பாடு வரும் ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்தியாவில் நாங்கள் 2 பில்லியன் டாலர்களை ஈட்டுவோம் என்ற வகையில் அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கான வியாபார திட்டம் உள்ளது', என்று ஹுவெய் கம்யூனிக்கேஷன்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் தலைமை செயலாளர் அதிகாரி காய் லிகுன் (Cai Liqun) தெரிவித்தார்.

இந்த தகவலை அவர் உலக மொபைல் காங்கிரஸி கூட்டத்தில் கலந்து கொண்டபோது தெரிவித்தார் என பிடிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

800 மில்லியன் டாலர்

800 மில்லியன் டாலர்

2013-ம் ஆண்டில் இந்நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை இந்தியாவிலிருந்து வருமானமாக பெற்றுள்ளது. உலகளவில், அதன் வருமானம் 39 பில்லியன் டாலர்களாக உள்ளது. கொள்கை ரீதியாக அனைத்தும் நன்றாக சென்றால் இந்த இலக்கை அடைந்து விடுவோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

4ஜி சேவை

4ஜி சேவை

4ஜி சூழல் பற்றி அவரிடம் கேட்ட போது, மற்றும் சீனாவில் TDD-LTE உரிமங்களை அங்குள்ள மூன்று ஆபரேட்டர்களும் பெற்று விட்டதால் நிறைய எல்டிஈ கைபேசிகள் இந்த ஆண்டு கிடைக்கும் இதனால் இந்த ஆண்டு 4ஜி சூழல் மேம்படும் என்றும் லிகுன் தெரிவித்தார்.

இந்தியாவில் 4ஜி சேவை மேம்படும்
 

இந்தியாவில் 4ஜி சேவை மேம்படும்

மேலும், இந்த ஆண்டின் முடிவில் சீனாவில் 4ஜி சேவையை பயன்படுத்துபவர்கள் சுமார் 900 மில்லியன் பேர்களாக இருப்பார்கள். இது இந்தியாவின் 4ஜி சூழலையும் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பெங்களூரு மற்றும் டெல்லி பகுதிகளுக்கு ஹுவெய் நிறுவனம் 4ஜி கருவிகளை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியை உலகளவில் தொடங்கியுள்ளது. அதன் மூலம் 2020-ம் ஆண்டில் இந்த கருவி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள்

600 மில்லியன் டாலர்களை 5ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக இந்நிறுவனம் செலவிட உள்ளது. '5ஜி-க்காக ஒதுக்கியுள்ள 600 மில்லியன் டாலர்களில், 5 பில்லியன் டாலர்களை 2014-ம் ஆண்டில் நாங்கள் செலவிட உள்ளோம்', என்று அவர் குறிப்பிட்டார்.

5ஜி சேவையின் சிறப்பு

5ஜி சேவையின் சிறப்பு

5ஜி நெட்வொர்க் 10Gbps வேகத்தில் செயல்படும். அது தற்போது செயல்பாட்டில் இருக்கும் மொபைல் தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமானதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Huawei looking at $2 billion revenue from India by 2017

Chinese equipment maker Huawei is targeting $2 billion revenue from its India operations by 2017-end on improving sentiment for the telecom sector.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X