பூட்டான் மின் திட்டத்திற்கு இந்தியா ரூ1,765 கோடி நிதியுதவி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியான்மர்: பூட்டானின் புனல்மின் (ஹைட்ரோபவர்) திட்டத்திற்கு இடைக்கால செலவீனமாக சுமார் 1,765 கோடி ரூபாயை வழங்குவதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்றைய தினம் மியான்மரில் நடைபெற்ற மூன்றாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.மன்மோஹன் சிங் கலந்து கொண்டார், இந்நிகழ்ச்சியின் இடைவேளையின் போது பூட்டானின் பிரதமரான திரு.ஷெரிங் டோப்கே அவர்களை சந்தித்த போது இதனை தெரிவித்திருக்கிறார்.

1,765 கோடி ரூபாய்

1,765 கோடி ரூபாய்

ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையான 1,765 கோடி ரூபாயை, இந்திய அரசாங்கத்தின் உள்நாட்டு நடைமுறைகள் நிறைவடைந்த பின் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று பூட்டானின் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியா - பூட்டான்

இந்தியா - பூட்டான்

இந்தியா மற்றும் பூட்டான் நாடுகள் இணைந்து கூட்டு முயற்சியின் மூலம் ஹைட்ரோபவர் புராஜெக்ட்களை உருவாக்குவது தொடர்பான இன்டர்கவர்ன்மென்டல் ஒப்பந்தத்தின் வரைவுக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதையும் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.

நான்கு திட்டங்கள்

நான்கு திட்டங்கள்

கூடிய சீக்கிரமே கையெழுத்தாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வரைவு ஒப்பந்தத்தின் கீழ், நான்கு திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை கோலங்ச்சூ திட்டம் (600 மெகாவாட்), வாங்ச்சூ திட்டம் (570 மெகாவாட்), சம்கர்ச்சூ திட்டம் (770 மெகாவாட்) மற்றும் புனாகா திட்டம் (180 மெகாவாட்) ஆகியனவாகும்.

திட்ட செயல்பாடு

திட்ட செயல்பாடு

இரு நாடுகளிக்கிடையேயான இன்டர்கவர்ன்மென்டல் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் கோலங்ச்சூ புராஜெக்ட்டிற்கான பணிகள் தொடங்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India approves Rs 1,765 crore for hydropower project in Bhutan

India has approved Rs 1,765 crore as the interim cost escalation for Bhutan's Punatshangchu I hydropower project. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X