உலகின் மிகவும் காஸ்ட்லியான தெருக்கள்..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அன்று முதல் இன்று வரை மக்களுக்கு மண் மீதும், பொன் மீதும் திராத ஆசை உண்டு. இந்த நவின வாழ்கை முறையிலும் மக்களின் ஆசை மாறமல் உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் நம்ம ஊர் பெண்களும் சரி ஆண்களும் சரி மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு மாறினாலும் கல்யாணத்திற்கு சவரன் கணக்கில் தங்க வாங்குவது இன்றளவும் குறையவில்லை என்பதே உண்மை. (வரதட்சணை வாங்காத ஆணும் இல்லை, வரதட்சணை கொடுக்காத பெண்ணும் இல்லை என்பதே இதன் பின்னணி).

ரியல் எஸ்டேட் துறையில் நிலம் வாங்குவதற்கு தயராக நிறைய பேர் கிளம்பி உள்ளதால் குறிகிய காலத்தில் இத்துறையின் வளர்ச்சி பண்மடங்கு உயர்ந்துள்ளது. இப்போது மக்களிடம் அதிகளவில் பணம் புழங்கி வருகிறது, இதனால் அவர்கள் ஆடம்பர வாழ்கையை வாழ துவங்கியுள்ளனர். மேலும் இப்போது சொகுசான மற்றும் ஆடம்பர சொத்துக்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

வெல்த்-எக்ஸ் (Wealth-X) என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் முடிவில், உலகத்திலேயே மிகவும் காஸ்ட்லியான தெருக்களை அடையாளம் காண ஒரு முயற்சி தொடங்கியது. இந்த தெருக்களில் நீங்கள் இடமோ அல்லது வீடு வாங்க வேண்டுமானல் நீங்கள் வாங்கும் வருடாந்திர சம்பளம் கூட ஒரு சதுரடிக்கு போதாது.

அவென்யூ மோன்டேய்க்னே, பாரிஸ்

அவென்யூ மோன்டேய்க்னே, பாரிஸ்

மிகவும் அதிகமான வசதியும் மற்றும் புகழும் ஒன்று சேரும் இடமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் நகரத்தின் அவென்யூ மோன்டேய்க்னே உள்ளது. 350 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்த தெரு பாரிஸ் நாட்டின் ஒரு கலாச்சார பொக்கிஷமாகவம் உள்ளது. இத்தெருவின் வளமையும் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு சதுர மீட்டர் நிலம் 26,000 டாலர்களுக்கு விற்கப்பட்டு (ஒரு சதுரடி 1,586,000 ரூபாய்) வரும் காஸ்ட்லியான தெரு இது! இப்பட்டியலில் 10ஆம் இடம் பிடித்துள்ளது.

ஐந்தாவது அவென்யூ, நியூயார்க்

ஐந்தாவது அவென்யூ, நியூயார்க்

நியூயார்க் நகரத்தின் மையமான இடத்தில் அமைந்துள்ளதால் அதன் மேல்தட்டு மக்களை கவர்ந்திழுக்கும் இடமாக ஐந்தாவது நிழற்சாலை உள்ளது. நகரத்தின் இதயம் போன்ற இடத்தில் அமைந்துள்ளதால், இந்த தெரு 1900-வது ஆண்டிலிருந்தே மேல்தட்டு மக்களின் கடைக்கண் பார்வைக்கு இலக்காக இருந்து வருகிறது. கோதம் சிட்டியயை எளிதில் அடைய ஏதுவாக இருக்கும் இந்நகரத்தில் ஒரு சதுர மீட்டர் நிலம் 28,000 டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது! இப்பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளது.

ஓஸ்டோஸென்கா, மாஸ்கோ

ஓஸ்டோஸென்கா, மாஸ்கோ

ஒரு காலத்தில் புரட்சிக்கு அத்தாட்சியாக நின்று கொண்டிருந்த, மாஸ்கோ நகரத்தின் ஓஸ்டோஸென்கா தெரு, இன்றைய நாட்களில் சொகுசு விடுதிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் தேவாலயங்களால் நிரம்பி வழியும் இடமாக உள்ளது. இந்த தெருவில் ஏதாவது ஒரு பகுதியை தனக்கு சொந்தமாக வைத்திருப்பதை பெருமையாக கருதுவர்களை கணக்கில் கொள்ள முடியவில்லை. ரஷ்யாவின் மிகவும் காஸ்ட்லியான இந்த பகுதியில் ஒரு சதுர மீட்டர் நிலம் 29,000 டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இப்பட்டியலில் 8ஆம் இடம் பிடித்துள்ளது.

ரோமாஸ்ஸினோ ஹில், சர்டானியா

ரோமாஸ்ஸினோ ஹில், சர்டானியா

ஒரு சதுர மீட்டர் நிலம் 32,900 டாலர்களுக்கு விற்கப்படுவதால் ரோமாஸ்ஸினோ ஹில் தெரு காஸ்ட்லியான தெருக்களின் வரிசையில் வந்துள்ளது. கத்தார் மற்றும் ரஷ்யாவின் பிற பில்லியனர்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியாக இந்த தீவு உள்ளது. இத்தாலியால் தன்னாட்சியுடன் உரிமை கொண்டாடப்பட்டு வரும் இந்த பகுதி, அதன் வளமையால் அனைவரையும் ஈர்க்கும் பிரதேசமாக உள்ளது. இப்பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளது.

செமின் டி ரூத், ஜெனிவா

செமின் டி ரூத், ஜெனிவா

அழகான அமைவிடம் மற்றும் அற்புதமான இயற்கை சூழல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் செமின் டி ரூத் தெரு, மேல்தட்டு மக்களை ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை. சுவிட்சர்லாந்தின் பனி மூடிய மலைகளிடையே இருக்கும் இந்த பகுதியில் ஒரு சதுர மீட்டர் நிலம் 37,000 டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. ஜேனிவா ஏரியின் முன்பகுதியை பார்த்தவாறு இருப்பதால் செமின் டி ரூத் உயர் வகுப்பினர் இந்த பகுதியை வளைத்து போட பார்ப்பதிலும் வியப்பில்லை.

பேட்டர்சன் ஹில், சிங்கப்பூர்

பேட்டர்சன் ஹில், சிங்கப்பூர்

முட்டுச் சந்தில் முடிவடையும் இந்த தெரு 'பில்லியனர் வரிசை' என்ற அடைமொழியை கொண்டிருப்பதில் இருந்தே நாட்டின் மிகவும் பணக்கார பகுதி என்பதை உணர முடியும். ஷாப்பிங் வசதிகள், டிசைனர் ஸ்டோர்கள் மற்றும் விடுதிகளை கொண்டிருக்கும் பேட்டர்சன் ஹில் பகுதியில் ஒரு சதுர அடி நீங்கள் வாங்க விரும்பினால் 42,500 டாலர்கள் செலவிட வேண்டியிருக்கும். வாழ்க்கையின் கதவுகளை வண்ணமயமாக்கும் சொகுசு வசதிகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்த விரும்பினால் பணத்தை தயார் செய்யுங்கள்.

பொலிவார்ட் டு ஜெனரல் டி காலே, கேப் ஃபெர்ரெட், பிரான்ஸ்

பொலிவார்ட் டு ஜெனரல் டி காலே, கேப் ஃபெர்ரெட், பிரான்ஸ்

கடற்கரைக்கு முன்னால் அணிவகுத்து நிற்கும் மாளிகைகளை கொண்டிருக்கும் பொலிவார்ட் டு ஜெனரல் டி காலே, உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான நகர குடியிருப்பு பகுதிகளில் ஒன்று. 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம் உயர் வகுப்பினரின் சொர்க்க பூமியாக உள்ளது. மத்திய தரைகடலின் மடியில் தவழ்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பொலிவார்ட் டு ஜெனரல் டி காலேவில் ஒரு சதுர மீட்டர் விலை 79,000 டாலர்கள் ஆகும்.

இளவரசி கிரேஸ் நிழற்சாலை, மொனாக்கோ

இளவரசி கிரேஸ் நிழற்சாலை, மொனாக்கோ

பனை மரங்கள் அணிவகுத்து நிழல் தரும் இளவரசி கிரேஸ் நிழற்சாலை மனம் மயக்கும் அழகையும் மற்றும் மூச்சைத் திணறடிக்கும் விலையையும் கொண்டுள்ளது. ஆம், இந்த அழகிய இடத்தில் ஒரு சதுர மீட்டர் விலை 86,000 டாலர்களாகும். மோனாக்கோ பிரின்ஸிபாலிட்டியின் குடியிருப்பு பகுதியாக, மத்தியதரைக்கடலை நோக்கியவாறு அமைந்திருக்கும் இளவரசி கிரேஸ் நிழற்சாலை மேல் வகுப்பினரின் விருப்பமான இடமாகும்.

கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸ், லண்டன்

கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸ், லண்டன்

கேம்பிரிட்ஜ் டியூக் அல்லது லட்சுமி மிட்டலின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருப்பது போல கனவு கண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் கனவ கண்ட இடத்தின் பெயர் லண்டனில் உள்ள கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸ் ஆகும். இங்கு ஒரு சதுர மீட்டர் நிலம் வாங்க 1,07,000 டாலர்களை மட்டுமே அதிகம் எல்லாம் இல்லை. உலகின் மிகவும் காஸ்ட்லியான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக இருக்கும் இவ்விடத்தில், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ரஷ்ய நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. இப்பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளது.

பொல்லாக் பாத், தி பீக், ஹாங்காங்

பொல்லாக் பாத், தி பீக், ஹாங்காங்

உலகிலேயே மிகவும் விலை அதிகமான நிலத்தை உரிமையாக வைத்திருப்பதை விட பெருமையான விஷயம் எதுவும் உள்ளதா! இந்த கனவை நனவாக்க விரும்பினால் ஹாங்காங்கின் பொல்லாக் பாத் பகுதிக்கு சென்று ஒரு சதுர மீட்டர் 1,20,000 டாலர்கள் விலையில் வாங்கலாம். ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்ந தெரு, நாட்டிலேயே மிகவும் பலம் மிக்க, வசதியான மற்றும் புகழ் பெற்றவர்கள் வசிக்கும் பகுதியாகும். துறைமுகத்தை ஒட்டியபடி, விண்ணைத் தொட முயற்சி செய்யும் கட்டிடங்களை, உலகின் மிகவும் காஸ்ட்லியான இந்த மலை தெருவிலிருந்து காண முடியும். இப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's 10 Most Expensive Streets To Reside

Over the years, with the increase in the number of potential buyers the real estate market is witnessing healthy property investments, especially in luxury property sector. expensive streets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X