மருத்துவத் துறையில் குவியும் அன்னிய முதலீடு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மருத்துவத் துறை கடந்த 10 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. மேலும் மருந்து தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் உலக நாடுகளுக்கு இந்தியா பெரும் சவாலகவே உள்ளது. இந்த வலிமையான காரணங்களால் இந்திய மருந்து தயாரிப்பு, மருத்துவ ஆராய்ச்சி, போன்ற துறைகளில் அன்னிய நாட்டு நிறுவனங்கள் அதிகப்படியாக முதலீடு செய்து வருகிறது.

கடந்த ஒன்பது மாதங்களில் இந்திய மருத்துவத்துறையில் அன்னிய முதலீடு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்ததுள்ளது. கடந்த வருடம் அதே காலகட்டத்தில் 58.90 கோடி டாலராக இருந்த முதலீடு இந்த வருடம் இரு மடங்கு உயர்ந்து 126 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்து நிறுவனங்கள்

இந்திய மருத்து நிறுவனங்கள்

வளர்ந்து வருடம் இந்திய மருத்து நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு வாங்க குவிந்துள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு கடுமையான புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

முக்கிய விதிமுறைகள்

முக்கிய விதிமுறைகள்

இந்த விதிமுறைகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக மருந்து நிறுவனங்களை தொடங்க 100 சதவீத முதலீட்டை நேரடியாக மேற்கொள்ளலாம். அதேசமயம், ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் மருந்து நிறுவனங்களில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டு மேம்பாட்டு குழுவின் (எஃப்.ஐ.பி.பீ) அனுமதியை பெற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தைக்கு பாதிப்பு

இந்திய சந்தைக்கு பாதிப்பு

இந்திய மருந்து நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதால் உள்நாட்டில் மருந்து தயாரிப்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

 96 சதவீதம்

96 சதவீதம்

கடந்த 2013 ஏப்ரல் வரையிலான 13 மாதங்களில் மருந்து துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில் 96 சதவீதம் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு வேலைவாய்ப்பு

உள்நாட்டு வேலைவாய்ப்பு

புதிய திட்டங்களில் முதலீடு அதிகரிப்பதால் உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மருந்து துறையிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் மருந்து துறையில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் டாப் ஐந்து நாடுகளில் இந்தியா ஒன்றாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FDI in India's pharma sector doubles during April-December

Foreign direct investment (FDI) in the pharma sector has more than doubled to $1.26 billion during April-December of the ongoing fiscal year (2013-14) amid concerns over increasing acquisitions of domestic firms by multinationals.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X