ஆன்லைன் இன்சூரன்ஸ் வர்த்தகம் ரூ.700 கோடியை எட்டியது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒரு கணினியும் இணையதள இணைப்பு இருந்தால் போதும், உலகம் உங்கள் கையில் என்று பலரும் கூறுவோம். அது உண்மைதான் வேகமாக ஒடும் உலகத்தில் மக்களின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுவது நேரம் தான். இந்த நேரத்தை பெருவாரியாக மிச்சப்படுத்துவது இணையதள சேவைகளும், தொலைபேசியும் தான்.

இண்டர்நெட் இணைப்பும், தொலைபேசியும் இருந்தால் ஹர்பின் முதல் ஏரோபிளேன் வாங்கலாம், சில சமையம் நம் உயிரையும் பாதுகாக்கலாம். ஆம் நாம் பேசுவது ஆன்லைன் இன்சூரன்ஸ் பற்றி தான்.

இந்தியாவில் ஆன்லைன் இன்சூரன்ஸ் வர்த்தகம் சுமார் 700 கோடியை தாண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பான இணையதள சேவைகள் என பாஸ்டன் கன்சல்டிங் குருப் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் நான்கில் முன்று இன்சூரன்ஸ் திட்டம் ஆன்லைன் வர்த்தகத்தை சார்ந்து இருக்கும் எனவும் தெவித்துள்ளது.

பாஸ்டன் கன்சல்டிங் குருப்

பாஸ்டன் கன்சல்டிங் குருப்

இந்நிறுவனம் "இன்சூரன்ஸ் டிஜிட்டல் 20எக்ஸ் பை 2020" என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. ஆன்லைன் இன்சூரன்ஸ் குறித்த முன் கொள்முதல், கொள்முதல் அல்லது புதுப்பித்தல் போன்ற சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்குவதால் மக்களை அதிகளவில் கவருவதாக இந்த அறிக்கையில் தெவித்தது. மேலும் ஆன்லைன் இன்சூரன்ஸில் மொபைல் பயன்பாட்டாளர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தது.

ஸ்மார்ட்போன் ஆதிக்கம்

ஸ்மார்ட்போன் ஆதிக்கம்

ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு அதன் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதன் வர்த்தகம் 2018ஆம் ஆண்டில் 11 மடங்கு உயரும் என பாஸ்டன் கன்சல்டிங் குருப் தெரிவித்தது.

ஆயுள் காப்பீடு
 

ஆயுள் காப்பீடு

தற்போது ஆன்லைன் ஆயுள் காப்பீட்டின் வர்த்தகம் 300 கோடி வரை உயர்ந்துள்ளது. 2008ஆம் வருடத்தை ஒப்பிடும் போது இதன் வளர்ச்சி தற்போது 4.5 மடங்கு உயர்ந்துள்ளது.

சுகாதார காப்பீடு

சுகாதார காப்பீடு

ஆன்லைன் சுகாதார காப்பீட்டின் வர்த்தகம் 150 கோடியாகும். மேலும் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏ-வின் கடுமையான விதிமுறைகளால் சுகாதார காப்பீட்டின் முறைகேடுகளை தடுத்து, முறையான சேவையை மக்களுக்கு அளிக்க ஐஆர்டிஏ திட்டமிட்டுள்ளது.

மோட்டார் இன்சூரன்ஸ்

மோட்டார் இன்சூரன்ஸ்

2014ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவில் இதன் வர்த்தக மதிப்பு 250 கோடியாகும்.

பயணக் காப்பீடு

பயணக் காப்பீடு

இன்னும் இந்தியாவில் பயணக் காப்பீட்டுன் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது என்றே கூறலாம் இதற்கான விழிப்புணர்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது என பாஸ்டன் கன்சல்டிங் குருப் தெரிவித்துள்ளது.

புகைப்படம்: லைவ்மின்டு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian online insurance is a Rs.700 cr market

The online insurance market in India is already in excess of Rs.700 crore. While life insurance sales contribute around Rs.300 crore, motor insurance around Rs.250 crore.
Story first published: Wednesday, March 19, 2014, 14:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X