அமெரிக்காவின் உதவி தேவையில்லை!! புடின் ஆவேசம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஸ்கோ: ரஷ்யாவில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக அங்கு பண பரிமாற்றாம் செய்யும் விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனம் அந்நாட்டில் தனது இணையவழி வங்கி சேவையை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் முடக்கியது.

(ரஷ்யாவை அடக்கியாள முயலும் அமெரிக்க நிதித்துறை!! கடுப்பில் புடின்..)(ரஷ்யாவை அடக்கியாள முயலும் அமெரிக்க நிதித்துறை!! கடுப்பில் புடின்..)

இதனை கண்டு கோபம் அடைந்த ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் தனி பண பரிமாற்ற சேவையை அரசு விரைவில் உருவாக்கும். இனி யார் உதவியும் இல்லாமல் செயல்படுவோம் என அவர் தெரிவித்தார். இந்த விசா, மாஸ்டர் கார்டு இரண்டு நிறுவனங்களுமே அமெரிக்க நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.

தடை மற்றும் முடக்கங்கள்

தடை மற்றும் முடக்கங்கள்

உலக போர் விதிகளை மீறியதன் காரணமாக ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனிடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பி நாடுகளுக்கு இடையே போக்குவரத்து மற்றும் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புடினின் நெருங்கிய வட்டாரங்களின் சுமார் 25 நபர்களின் சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியுள்ளது.

பண அட்டை வணிகம்

பண அட்டை வணிகம்

மேலும் சில வங்கிகளில் சில முக்கிய நபர்களின் பண அட்டை வணிகத்தை விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனம் தற்காலிகமாக நிறுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய பொருளாதாரம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஜப்பான், சீனா
 

ஜப்பான், சீனா

இன்று புடின் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா, ஜப்பான் நாட்டின் ஜேசிபி மற்றும் சீனாவின் யூனியன் பே போன்று செயல்படும் என தெரிவித்துள்ளது.

அடிமை வாழ்கை

அடிமை வாழ்கை

விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவன சேவைகளின் மூலம் ரஷ்யா அடிமைகள் போல் செயல்பட்டது. இனி இந்த அமெரிக்கர்களின் தொல்லை நமக்கு இருக்காது என புடின் கலந்து கொண்ட ஒரு தொலைகாட்சி செய்திகளில் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia to set up own payment system

Russia’s President Vladimir Putin says Russia will set up its own payment system to rival Visa and MasterCard.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X