8000 கோடி வரி ஏய்ப்பு!! நிறுவனங்களின் மீது மோசடி வழக்கு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2014ஆம் ஆண்டு துவக்கம் முதலே நிதியமைச்சகம் சேவை வரியின் மூலம் பெரு வருமானத்தை எதிர்ப்பாத்து அதற்கான பல முயற்சிகள் எடுத்தது. இதனால் மத்திய அரசிற்கு கணிசமான வருமானம் கிடைத்தது. ஆனால் நாட்டின் சட்டதிட்டத்தின் மீது பயம் இல்லாத சில நிறுவனங்கள் சேவை வரி சரிவர செலுத்தாத காரணத்தினால் இந்திய அரசிற்கு சுமார் 8,000 கோடி நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது.

நிதியமைச்சகத்தின் தகவல்கள் படி இந்தியாவில் பல சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் தங்களிந் உண்மையான சேவை செலுத்தாமல் தவறான படிவங்களின் மூலம் குறைவான சேவை வரியை செலுத்தியுள்ளனர் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

8000 கோடி ரூபாய்

8000 கோடி ரூபாய்

இந்த வரி ஏய்ப்பு குறித்து மத்திய வரி புலனாய்வு இயக்குநரகம் 2013-14ஆம் நிதியாண்டில் சுமார் 1,144 வழக்குகள் பதிவு செய்துள்ளது. மதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மூலம் சுமார் 7928 கோடி ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள்

வழக்குகள்

மேலும் சேவை வரி ஏய்ப்பின் சம்ந்தமான பல வழக்குகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என நிதியைமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து வழக்குகளும் முறையாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.

பொருளாதார நெருக்கடி
 

பொருளாதார நெருக்கடி

தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியான நேரத்தில் அரசிற்கு சேவை வரியின் மீது ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த சேவை வரியை மிகவும் கண்டிப்பான முறையில் வசூல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அரசின் குருவூலத்தில் சில ஆயிரம் கோடி நிதிகளை திரட்ட முடியும் என நிதியமைச்சகம் நம்புகிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

கடுமையான சட்டதிட்டங்களுடன் சேவை வரி செலுத்தாத நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க நிதியமைச்சகம் முனைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 8k cr service tax evasion in FY14

With increased focus on revenue generation from service tax, officials have detected several cases of tax evasion amounting to about Rs 8,000 crore during 2013-14 fiscal which ended last month.
Story first published: Monday, April 7, 2014, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X