மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமா?? அப்ப இத படிங்க..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது, அது போலத்தான் வாழ்கையும். நிதி நிலைமை என்னும் சுவர் சரியாக இருந்தால் தான் வாழ்க்கை என்னும் ஒவியம் அழகாக இருக்கும். எனவே ஒவ்வொரு செங்கல்லாக சேர்த்தால் தான் ஒரு சுவற்றை உங்களால் கட்ட முடியும். எனவே உங்களுடைய பணம் தொடர்பான விவகாரங்களின் ஒவ்வொரு செயலையும் நீங்கள் தீர்க்கமாக கவனிக்க வேண்டும்.

 

இந்த செயல்முறையில் நீங்கள் ஆரம்பத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் தான் உங்களை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் என்பதை நீங்கள் மற்ந்து விடாதீர்கள். இதை செய்வதற்கு நீங்கள் ஒன்றும் பெரிய வல்லுநராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், இப்பொழுது நீங்கள் மாட்டித் திணறிக் கொண்டிருக்கும் பணம் தொடர்பான பிரச்னைகள் எதிர்காலத்தில் உங்களை மீண்டும் தாக்காமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள வழிகள் கண்டிப்பாக உதவும்.

வீட்டுக்கு ஒரு பட்ஜெட்

வீட்டுக்கு ஒரு பட்ஜெட்

உங்களிடம் உள்ள சொத்துக்களையும், செய்ய வேண்டிய பணிகளையும் பட்டியலிடுவது முதல் படியாகும். அவற்றின் நிகர மதிப்பை கண்டறிய வேண்டும். இறுதியாக, உங்களின் மாத செலவுகளைக் கணக்கிட்டு, அவற்றில் எதைக் குறைக்கலாம் என்று அறிய முயலுங்கள்.

அவசரத் தேவைக்கு!

அவசரத் தேவைக்கு!

அடுத்ததாக, மிகவும் முக்கியமான ஒரு படிநிலைக்கு வந்து விட்டீர்கள். யாருடைய பண விவகாரம் சரியான நிலையில் இல்லையென்றாலும், அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் அவசரத் தேவைக்கான பணத்தை ஒதுக்கீடு செய்வது தான். இதற்கான குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு செலவு செய்யும் பணத்தை சேமிப்பு கணக்கிலோ, வைப்பு நிதியிலோ அல்லது லிக்விட் பண்ட் ஆகவோ ஒதுக்கி வையுங்கள். இந்த விஷயத்திற்கு மாற்றாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டொழியுங்கள்.

அதிக கடன் வேண்டாம்
 

அதிக கடன் வேண்டாம்

முதலாவதாக, இதற்குப் பின்னர் கடன்களை வாங்குவதை நிறுத்தவும். உங்களிடம் அதிகமாக பணம் இருப்பதாகத் தோன்றினால், இருக்கும் கடன்களையோ அல்லது கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையையோ திரும்பச் செலுத்துவது பற்றி மட்டும் யோசியுங்கள்.

ஆயுள் காப்பீட்டின் அவசியம்

ஆயுள் காப்பீட்டின் அவசியம்

உங்களுடைய ஒரு ஆண்டு செலவில் 12 முதல் 15 மடங்காகவோ அல்லது ஒரு ஆண்டு வருமானத்தில் 8 முதல் 10 மடங்ககாகவோ பணம் கிடைக்கும் வகையில் ஆயுள் காப்பீடு செய்து கொண்டால், உங்களை நம்பி இருப்பவர்களுக்கு நற்பயன்கள் உண்டாகும். ஆயுள் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நிர்ணயிக்கும் போது, நீங்கள் தற்போது செலுத்திக் கொண்டிருக்கும் வீட்டுக் கடன் போன்ற விஷயங்களை கணக்கில் கொள்ள மறந்து விட வேண்டாம்.

மருத்துவக் காப்பீடு தேவை

மருத்துவக் காப்பீடு தேவை

குறைந்தபட்சம் 3 முதல் 5 இலட்சம் வரைக்கும் மருத்துவக் காப்பீடுகளை செய்ய வேண்டியது அவசியமாகும். அது உங்களுக்கு வேலை தந்துள்ள நிறுவனத்தின் காப்பீட்டை விட அதிகமாகவும் இருக்க வேண்டும்.

ஓய்வு பெறுவதை யோசிக்கவும்

ஓய்வு பெறுவதை யோசிக்கவும்

ஒரு பொது சேமநல நிதி கணக்கைத் துவங்கி, ஒரு வருடத்திற்கு உங்களால் அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு சேமிக்கத் துவங்குங்கள். அதே போல, நீங்கள் வேலை மாறும் காலங்களில் தொழிலாளர் நல நிதியை கணக்கிலிருந்து எடுக்கவும் வேண்டாம்.

ஆட்டோ-பைலட்

ஆட்டோ-பைலட்

நீங்கள் எந்தவித பேமண்ட்களையும் தவிர்க்க முடியாதவாறு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆன்லைன் கிரெடிட் வசதிகளைப் பயன்படுத்தி உங்களுடைய பில்கள், கடன்கள், இ.எம்.ஐ, கார்டுகளுக்கான தவணைகள் போன்றவற்றை தானாகவே செலுத்த ஆவண செய்யுங்கள் அல்லது உங்களுடைய மொபைலில் இவற்றை நினைவுபடுத்தும் வகையில் ரிமைண்டர்களை வைத்திருங்கள். எக்காரணத்தைக் கொண்டும் கால தாமதத்திற்காக கட்டணம் செலுத்தும் நிலையிலிருந்து மீண்டு விடுங்கள்.

உதவி

உதவி

மேற்கண்ட படிநிலைகள் உங்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும். எனினும், உங்களால் பணம் தொடர்பான விஷயங்களை சரியாக பராமரிக்க முடியவில்லை என்று உணர்ந்தால், இதற்காகவே காத்திருக்கும் நிதி திட்டமிடுதல் சேவைகளைத் தரும் வல்லுநர்கள். அவர்களுடைய உதவியை நாடிச் செல்லுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 quick steps to get your financial life in order

How do you build a wall? One brick, at a time. Likewise, if you have never taken your money matters seriously, only baby steps can put you on the right track. Nope, you won’t be an expert investor by taking these steps, neither will all your finances come in order.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X