ஆட்கள் பற்றாக்குறை!! பரிதவிக்கும் துபாய் கட்டுமானத் துறை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்தில் கொடிக்கட்டி பறக்கும் ஐக்கிய அரபு நாடான துபாய் 2015ஆம் ஆண்டில் இந்நாட்டு கட்டுமானத்துறையில் சுமார் 500,000 ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கும் என ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் துபாய் வளரச்சியில் தொய்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவு இந்த அறிக்கை குறிப்பிட்டு இருந்தது.

 

துபாய் இண்டர்நேஷ்னல் அக்கடமிக் சிட்டி (DIAC) மற்றும் ஆலோசனை நிறுவனமான டூலிட்டில் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் 2015ஆம் வருடம் அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்களில் அனைத்து மட்ட பதவியிலும் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தது.

தகுதிக் குறைவு

தகுதிக் குறைவு

இந்த ஆய்வை மேற்கொண்ட போது கட்டுமான துறையில் பணிபுரியும் 43 சதவீத உயர் அதிகாரிகளுக்கு தங்களின் பதவிக்கு மிகவும் குறைவான அளவே திறமையுள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.

வடிவமைப்பு திறன்

வடிவமைப்பு திறன்

மேலும் நிறுவனங்களின் நடுத்தர ஊழியர்களுக்கு 54 சதவீத ஊழியர்களுக்கு வடிவமைப்பு திறன் குறைவாக உள்ளதாக தெரிவிக்கிறது.

வோல்டு எக்ஸ்போ 2020

வோல்டு எக்ஸ்போ 2020

உலக கட்டுமான துறை 2020ஆம் ஆண்டு நடத்தும் வோல்டு எக்ஸ்போ நிகழ்ச்சி துபாயில் நடத்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் துபாய் கட்டுமான துறையின் வளர்ச்சி 23 சதவீதம் உயர்ந்தது.

45,000 விடுதி அறைகள்
 

45,000 விடுதி அறைகள்

இந்நிகழ்ச்சிக்காக சுமார் 45,000 புதிய விடுதி அறைகள் தேவைப்படும் என ஹெச்எஸ்பிசி வங்கி கணித்துள்ளது. இதற்கான பணிகளை துபாய் மற்றும் உலக நாடுகளின் கட்டுமான நிறுவனங்கள் தங்களின் பணிகளை முழுவேகத்தில் துவங்கியுள்ளன.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

இந்நிகழ்ச்சிக்கான கட்டுமான செலவுகள் மட்டும் சுமார் 3.40 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தை வெற்றிகரமான செய்து முடிக்க திறமைவாய்ந்த பணியாளர்கள் தேவை. இதனால் இப்பகுதியில் வேலைவாய்ப்பு மிகப்பெரிய அளவில் உயர உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dubai faces 500,000 construction workers' shortage

With the real estate sector in the Gulf Arab emirate Dubai showing no let-up in expanding, the construction sector here is all set to witness a shortage of 500,000 workers by 2015, a media report said here Saturday. 
Story first published: Monday, April 21, 2014, 13:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X