ரூ.240 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை!! ஹீரோ மோட்டார் கார்ப்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் பங்களாதேஷ் நாட்டின் நிடோல் நிலாய் குமுமத்துடன் இணைந்து ஒரு புதிய உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இருநிறுவனங்களும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 240 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

 

இந்த கூட்டு முயற்சியில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் 55 சதவீத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும், மதிமுள்ள 45 சதவீதம் நிடோல் நிலாய் குழுமம் பெற்றுக்கொள்ளும். இந்த தொழிற்சாலை வருடத்திற்கு சுமார் 150,000 வாகனங்களை தயாரிக்கு திறன் கொண்டவையாக உருவாக்கப்படும் என ஹீரோமோட்டார் கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பவன் முஞ்சால்

பவன் முஞ்சால்

இதுகுறித்து ஹீரோமோட்டார் கார்ப் நிறுவனத்தின் சிஈஓ மற்றும் தலைமை நிர்வாகியான பவன் முஞ்சால் கூறுகையில், "இந்த கூட்டு முயற்சி நிறுவனத்திற்கு ஒரு மையில்கல்லாக அமையும். மேலும் இந்தியாவை விட்டு பிற நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலையை முதன் முறையாக அமைக்கிறோம். " என்று பெருமிதமாக தெரிவித்தார்.

சந்தை கைபற்றுதல்

சந்தை கைபற்றுதல்

இதன் மூலம் 2015-16ஆம் நிதியாண்டில் பங்களாதேஷில் சுமார் 20 சதவீத சந்தையை கைபற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கான திட்ட வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் பவன் முஞ்சால் தெரிவித்தார்.

நிடோல் நிலாய் குழுமம்

நிடோல் நிலாய் குழுமம்

இந்நிறுவனம் பங்களாதேஷில் பல துறைகளில் செயல்படுகிறது, குறிப்பாக இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனகளை நாடு முழுவதும் விநியோகம் செய்துவருகிறது.

பங்கு சந்தை
 

பங்கு சந்தை

இந்த செய்தியை வெளியிட்ட பின்பு இந்நிறுவனத்தின் பங்குகளில் விலை 20 புள்ளிகள் உயர்ந்து 2266.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero MotoCorp goes to Bangladesh

Hero MotoCorp, India’s largest two-wheeler maker, on Monday announced a joint venture with Bangladesh’s Nitol Niloy group. The two companies plan to invest around ₹240 crore over the next five years.
Story first published: Tuesday, April 22, 2014, 17:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X