நோக்கியா - மைக்ரோசாப்ட் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: மென்பொருள் துறையின் மன்னன் என போற்றப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், பின்லாந்தை சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவின் சில பரிவுகளை கைபற்றியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த ஒப்பந்தத்தின் படி வரும் வெள்ளிக்கிழமை முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்பிரிவுகளை முழுமையாக கைபற்றப்போகிறது. இதன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மொபைல் வர்த்தகத்தை வின்டோஸ் போன் என்ற பெயரில் துவங்க உள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தில் பல சட்ட சிக்கல்கள் இருந்தது, இதை அனைத்தையும் சமாளித்து இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ ஸ்டீவ் பால்மர் தலைமையில் 8 மாதத்திற்கு முன்பு செய்யப்பட்டது என்பது குறிப்படதக்கது.

7 பில்லியன் டாலர்

7 பில்லியன் டாலர்

இந்த ஒப்பந்தத்தில் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் விற்பனை மற்றும் பல காப்புரிமைகள் உட்பட்ட அனைத்தையும் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது.

நோக்கியா

நோக்கியா

நோக்கியா நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு மொபைல் தயாரிப்பு, விற்பனை, மொபைல் மென்பொருள் போன்ற அனைத்திலும் கொடி கட்டி பறந்தன. இன்றளவும் இந்நிறுவனத்தின் வன்பொருளின் மதிப்பு உலகளவிலும் பேசும் படியாக உள்ளது.

ஏன் இந்த நிலை!!
 

ஏன் இந்த நிலை!!

மொபைல் உலகில் யாருக்கும் எட்டாத இடத்தில் இருந்த நோக்கிய நிறுவனத்திற்கு தூரத்தில் ஒரு ஆப்பு வருவதை கணிக்க தவறிவிட்டது. நோக்கிய நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த நிறுவனம் இரண்டும் ஒரு ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்போன் வருகை மற்றும் கூகிள் நிறுவனத்தின் ஆண்டுராய்டு மென்பொருள் தான். இந்த இருநிறுவனங்களின் பக்கம் மக்கள் திரும்பினர் இதனால் இந்நிறுவன செயவதறியாது குழம்பி நின்றது. இதனால் மொத்தமும் பரிபோனது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொது ஆலோசகரான் பிராட் ஸ்டோன் தனது வலைபக்கத்தில் "நோக்கிய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அனைத்து செயல்பாடுகளும் முடிந்து, கூடிய விரைவில் விண்டோஸ் போன் வெளிவரும்" என அவர் தெரிவித்தார்.

வன்பொருள்

வன்பொருள்

பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வன்பொருள் தயாரிப்பில் பின்தங்கியே இருந்தது. நோக்கிய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் முழுமையான மொபைல் போன்களை தயாரிக்க இந்நிறுவனம் துவங்கியுள்ளது. இதனை அடுத்து இந்நிறுவனம் மறைமுகமாக ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட துவங்கியுள்ளது என்று சொன்னால் மிகையாகது.

ஆப்பிள் - மைக்ரோசாப்ட்

ஆப்பிள் - மைக்ரோசாப்ட்

ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி ரிசர்ச்சரின் கணிப்பின் படி 2016ஆம் ஆண்டில் உலக மொபைல் வர்த்தகத்தில் விண்டோஸ் போனின் பங்கு 4.8 சதவீதமாக இருக்கும், அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் 14.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ட்ராய்டு மென்பொருளின் ஆதிக்கம் 77.5 சதவீதத்தை தொடும் எனவும் ஐடிசி ரிசர்ச்சர் நிறுவனம் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft to close Nokia deal by Friday

Microsoft will officially conclude its buyout of Finnish mobile phone maker Nokia by Friday, after clearing all regulatory hurdles in the US and internationally, the company said on Monday.
Story first published: Tuesday, April 22, 2014, 13:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X