ஒபாமாவின் இயற்கை எரிவாயு திட்டம்: அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இயற்கை எரிவாயு ஏற்றமதி திட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்து, எரிவாயுத் துறையில் உலகின் மூடி சூடா மன்னனாக திகழ வேண்டும் என்பதே இந்நாட்டின் நோக்கம்.

 

இத்திட்டத்தினை எதிர்த்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 22 செனட் உறுப்பினர்கள் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

எரிவாயு விலை

எரிவாயு விலை

அமெரிக்காவில் தற்போது உள்ள இயற்கை எரிவாயுவின் விலையைவிட ஆசிய நாடுகளில் 3 முதல் 4 மடங்கு அதிகம்.

தொழில் துறை பாதிப்பு

தொழில் துறை பாதிப்பு

இயற்கை எரி வாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலம் அமெரிக்கா வில் நுகர்வோருக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கிடைக்கும் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இயற்கை எரிவாயு விலை குறைவாக இருப்பதால்தான் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே, ஏற்றுமதி செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று இந்த அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது.

எரிவாயு - போர்
 

எரிவாயு - போர்

1993 முதல் இன்று வரை அமெரிக்கா இயற்கை எரிவாயு அதிகமாக இருக்கும் நாடுகளுடனே போர் செய்து வருகிறது. குறிப்பாக பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ், சோமாலியா, யெமென், லிபியா ஆகிய நாடுகள் அனைத்துமே எண்ணெய் வளம் அதிக உள்ள நாடுகளே. மேலும் ஈராக் மற்றும் லிபியாவில் உள்நாட்டு போர்களை கிளப்பி அதன் மூலம் நாட்டை கைபற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US senators against export of natural gas to India, China

A bi-partisan group of 22 American senators have expressed reservation on the export of natural gas to Asian countries such as India and China, arguing that such a move by Obama Administration would result in an increase in cost for consumers and businesses at home.
Story first published: Monday, May 12, 2014, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X