இந்தியாவுல எல்லாமே சீப்தான்... சர்வே சொல்கிறது..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடான இந்தியாவில் மற்ற பெரிய நாடுகளைவிட விலைவாசி மலிவாகத் தான் உள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

 

தொடர்ந்து பணவீக்கத்தில் தத்தளித்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அந்த சர்வே கூறுகிறது. மலிவாக இருப்பதைவிட மற்ற நாடுகளுடன் ஒரு நல்ல போட்டியைக் கொடுப்பதுதான் முக்கியம் என்பதும் ஒரு காரணம்.

சினிமா மற்றும் பர்கர்

சினிமா மற்றும் பர்கர்

இந்திய நகரங்களில்தான் சினிமா டிக்கெட் மற்றும் நாம் விரும்பி சாப்பிடும் பர்கர் ஆகியவற்றின் விலை ரொம்பவும் கம்மியாம்.

வீக் எண்ட் பார்டி

வீக் எண்ட் பார்டி

மும்பையிலும் மலேசியாவின் கோலாலம்பூரிலும்தான் மிகவும் சீப்பாக வார இறுதி விடுமுறையைக் கொண்டாடலாம் என்றும், இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி ரொம்ப காஸ்ட்லி என்றும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.

டாய்ச்சிஸ் வங்கி
 

டாய்ச்சிஸ் வங்கி

உலகின் முக்கிய நகரங்களில் விலைவாசி மற்றும் இதர சேவைகளின் போக்கு எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் டாய்ச்சிஸ் வங்கி இதுபோன்ற கணக்கெடுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. லெவிஸ் ஜீன்ஸ் விலை முதல் வோல்க்ஸ்வேகன் கார் விலை வரை, பீர் விலை முதல் டியூசன் ஃபீஸ் எவ்வளவு என்பது வரை ஆய்வுகள் நடக்கின்றன.

ஆஸ்திரேலியா டூ பிரேசில்

ஆஸ்திரேலியா டூ பிரேசில்

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில்தான் வழக்கம்போல் விலைவாசி மிகவும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா ரொம்ப சீப் என்றும், வளர்ந்துவரும் நாடுகளில் பிரேசில்தான் ரொம்ப காஸ்ட்லி என்றும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது. ஜப்பானிலும் எல்லாம் ஓரளவு சீப்தானாம்!

லெவிஸ் ஜீன்ஸ் - ஐபோன்

லெவிஸ் ஜீன்ஸ் - ஐபோன்

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஐபோன், லெவிஸ் ஜீன்ஸ், அதிதாஸ் ஷூக்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலை அமெரிக்காவைவிட சீனாவில்தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

சலூன்

சலூன்

ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸூரிக் நகரமும் ரொம்ப காஸ்ட்லிதானாம். முடி வெட்டுவதற்கு ஒரு இந்திய நகரைவிட இங்கு 15 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India cheapest major economy: Survey

Notwithstanding high inflation rate, India is the cheapest major economy in the world, according to a survey of global prices of products that are comparable across countries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X