கலாநிதி மாறனுக்கு "சேம் ஸ்வீட்" அடித்த விஜய் மல்லையா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1003.2 கோடி நஷ்டம் அடைந்ததாக கடந்த வாரம் இந்நிறுவனம் அறிக்கையை வெளியிட்டது. 2013ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.191 கோடி மட்டுமே நஷ்டம் அடைந்துள்ளது குறிப்பிடதக்கது. ஒரு வருட காலத்தில், நஷ்டத்தில் 5 மடங்கு வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது ஸ்பைஸ்ஜெட்.

இந்தியாவின் ஒரு பிரபல தணிக்கையாளர் நிறுவனம் ஒன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ரூ.1019.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் நஷ்டம் அடைந்துள்ளதால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் பிரச்சனை எழுந்துள்ளது என தெரிவித்துள்ளது.

அதிரடியான ஆஃபர்கள்

அதிரடியான ஆஃபர்கள்

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 7 முதல் 9 ஆஃபர்களை அள்ளி விசியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இதன் காரணமாகவே அதிகப்படியான நஷ்டத்தை தழுவியது என சில நிறுவனங்கள் தெரிவிக்கிறது. (நம்ம கூட யாருமே இல்லையேனு பார்தே கலாநிதி மன்றன் கம்பனி கொடுக்க வாராரு போல... ஐ எம் வெரி ஹாப்பி.. விஜய் மல்லையா..)

கடைசி காலாண்டு

கடைசி காலாண்டு

2014ஆம் நிதியாண்டின் மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் ரூ.321.5 கோடி நஷ்டத்தை சந்தித்தது. மேலும் அதிகப்படியான நஷ்டத்தை ஸ்பைஸ்ஜெட் பதிவு செய்துள்ளதால் இந்நிறுவனம் 7.5 கோடிக்கும் அதிகமான தொகையை பாதுகாப்பு தொகையாக டெபாசிட் செய்ய நிர்பந்திக்கப்படும் எனவும் தணிக்கையாளராண் எஸ்.ஆர் பட்லிபாய் நிறுவனம் தெரிவித்தது.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில்,"கடந்த வருடம் இந்தியா விமான துறைக்கு மிகவும் சாதகமற்ற ஆண்டாக அமைந்தது. இந்திய விமான போக்குவரத்தின் செலவுகள் டாலர்களை சார்ந்தே இருக்கிறது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கடுமையான பாதிப்பை அடைந்தோம்." என நிறுவனம் தெரிவித்து.

வருவாய் மற்றும் செலவீனம்

வருவாய் மற்றும் செலவீனம்

2013-14ஆம் நிதியாண்டின் விமான போக்குவரத்து துறையின் வருவாய் 12 சதவீதம் அதிகரித்து 6350.6 கோடியாக உயர்ந்தது, மேலும் செலவீனம் 24 சதவீதம் அதிகரித்து 7303.7 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தால் இந்திய விமான போக்குவரத்து துறையின் பயணிகள் கட்டணம் சராசரியாக 3 சதவீதம் உயர்ந்துள்ளது. (இதுலேயும் பாதிப்பு மக்களுக்கு தான்..)

கிங்பிஷர்

கிங்பிஷர்

இந்திய விமான போக்குவரத்து துறையில் நீங்கா இடம்பிடித்த நிறுவனம் கிங்பிஷர். இந்நிறுவனத்தின் வளர்ந்து முடிந்த கதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் விகிதத்தை பார்க்கும் போது கிங்பிஷரின் சாயல் தெரிகிறது என பல முக்கிய புள்ளிகள் தெரிவித்துள்ளனர்.

ஏர்ஏசியா

ஏர்ஏசியா

போட்டி மிகுந்த இந்திய விமான போக்குவரத்து துறையில் போட்டியை மேலும் அதிகரிக்க டாடா குழுமத்தின் கூட்டணியில் மலேசிய நிறுவனமான ஏர்ஏசியா இந்தியாவில் களமிறங்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet posts record Rs 1,003 crore loss in FY14

Low-cost carrier SpiceJet has posted its highest ever annual loss of Rs 1,003.2 crore in FY14, up five times from Rs 191 crore in the previous fiscal. The LCC's auditor has said this loss along with SpiceJet's total liabilities exceeding its assets by Rs 1,019.5 crore on March 31, 2014.
Story first published: Monday, May 19, 2014, 12:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X