இந்திய பெண்களுக்கு தங்கம் மீதுள்ள மோகம் குறைந்தது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியா மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள தீராத ஆசை குறைந்தது வருவதாக வோல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலவும் நடப்பு கணக்கு பாற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியின் மீது அதிகப்படியான வரி விதித்தது. இதனால் தங்க இறக்குமதியில் உலகின் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, 3 மாதங்களில் தங்க இறக்குமதியை 26 சதவீதம் குறைத்துள்ளதாக வோல்டு கோல்டு கவுன்சிலின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய கட்டுப்பாடுகளால் தங்கத்தின் விலை உயர் துவங்கியது, இதனால் இந்திய பெண்கள் தங்கம் வாங்குவதை குறைத்துள்ளாதாகவும் தகவல்கள் வருகிறது. மேலும் ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் இந்தியா 190.3 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.

வோல்டு கோல்டு கவுன்சில்

வோல்டு கோல்டு கவுன்சில்

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்தியா 257.5 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது, இதன் மதிப்பு 73,183.6 கோடியாகும். நடப்பு நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 48,853 கோடியாக குறைந்து 33 சதவீதம் சரிவை தழுவியுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

2014ஆம் ஆண்டில் தங்க இறக்குமதி குறைந்ததிற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கடுமையான இறக்குமதி வரியும், அதிகமான நடப்பு கணக்கு பற்றாக்குறையும் தான் என வோல்டு கோல்டு கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் சோமாசுந்தரம் பிடிஐ அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

கடத்தல்

கடத்தல்

முறையான தங்க இறக்குமதியில் கெடுபிடி அதிகரித்ததால், கடத்தல் மூலமாக இந்தியாவில் அதிகப்படியான தங்கம் கொண்டு வரப்படுகிறது. இதனால் அரசிற்கு கிடைக்க வேண்டிய வரிப் பணம் கிடைக்காமல் போகிறது. மேலும் அது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பது மறுக்க முடியாத ஒன்று.

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள்

இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கத்தின் தேவை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகளும் ஒன்று என்பதால் இங்கிருந்து அதிகளவில் தங்கம் இந்தியாவிற்குள் வருவதாக சோமாசுந்தரம் குறிப்பிட்டார்.

புதிய அரசு

புதிய அரசு

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் சிறப்பான மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்பதகவும் சோமாசுந்தரம் அவர்கள் தெரிவித்தார்.

1,000 டன்

1,000 டன்

மேலும் 2014ஆம் ஆண்டில் இந்தியா 900 - 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்போதைய பொருளாதார நிலையை ஒப்பிட்டு பார்க்கும் போது தங்க இறக்குமதி மீதுள்ள கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's gold demand down 26% at 190.3 tonne: WGC

Gold demand in India declined by 26% to 190.3 tonne during the January-March quarter due to higher import duties and supply curbs imposed by the government, the World Gold Council on Tuesday said. 
Story first published: Tuesday, May 20, 2014, 13:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X