கடும் எதிர்ப்பில் தபால் துறைக்கு வங்கி உரிமம்!! ரிசர்வ் வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா போஸ்ட் என்று அழைக்கப்படும் இந்திய தபால் துறை இந்தியாவில் வங்கிகளை திறக்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கான உரிமத்தை நிதியமைச்சகம் மறுத்தும், தற்போது ரிசர்வ் வங்கி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா தபால் துறை மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளது.

மேலும் மாதம் முழுவதும் தபால் அலுவலகத்தில் வேலையில்லாமல் பொழுதைபோக்கும் தபால் நிலைய ஊழியர்கள் இது கசப்பான செய்தியாக இருந்தாலும், மக்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி தான்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) வருடாந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் பேசிய போது," இந்திய தபால் துறைக்கு முழுமையான வங்கி உரிமத்தை வழங்க முடியாத நிலையில் உள்ளோம், ஆனாலும் தபால் துறை சிறப்பான வங்கிச் சேவையை அளிக்கவும், அதிகப்படியான நிதியை திரட்டவும் வழிவகை செய்யும் நோக்கில் சிறு நிதியியல் நிறுவன உரிமத்தை (லிமிடெட் பாங்கிங் லைசன்ஸ்) வழங்க திட்டமிட்டுள்ளோம்" என ராஜன் தெரிவித்தார்.

இந்திய தபால் துறை

இந்திய தபால் துறை

இத்தகைய உரிமத்தின் மூலம் தபால் துறை, தபால் நிலையங்களின் மூலம் பிரமாற்ற வங்கிச் சேவை, டெப்பாசிட் போன்ற வங்கியின் முக்கிய சேவைகளை அளிக்க முடியும் எனவும் ராஜன் தெரிவித்தார்.

அனுபவமற்ற தபால் துறை

அனுபவமற்ற தபால் துறை

இன்றைய நாள் வரை தபால் துறைக்கு வங்கிச் சேவையில் ஈடுபட்டதில்லை, இதனால் இத்தகைய உரிமம் தபால் துறைக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை அளிக்கும். மேலும் அடுத்த சில வருடங்களில் இந்தியா முழுவதும் வங்கிச் சேவையை அளிக்க தபால் துறைக்கு அனைத்து விதிமான தகுதிகளும் கிடைத்துவிடும்.

லிமிடெட் பாங்கிங் லைசன்ஸ்

லிமிடெட் பாங்கிங் லைசன்ஸ்

இத்தகைய லிமிடெட் பாங்கிங் லைசன்ஸ் பெறுவதினால் இந்திய தபால் துறை அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கிச் சேவையை அளிக்க முடியாது. குறிப்பிட்ட சில தபால் நிலைங்களில் மட்டுமே இத்தகைய சேவையை அளிக்க முடியும்.

மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

இந்தியாவில் நகரங்களை விட கிராமங்களே அதிகளவில் உள்ளது. ஆகவே தபால் நிலையங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் உள்ளது. இதனால் கிராம மக்களை அதிகளவில் கவரந்து அதிகப்படியான டெப்பாசிட்களை பெற முடியும்.

ஸ்டேட் வங்கி

ஸ்டேட் வங்கி

தபால் துறை முழுமையான வங்கி உரிமம் கிடைத்தால் ஒரே வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியை விட பெரிய நிறுவனமான உருவெடுக்கும் என ரகுராம் ராஜன் தெரிவித்தார். ஸ்டேட் வங்கிக்கு இந்தியா முழுவதும் 1500 வங்கி கிளைகள் மட்டும் உள்ளது, தபால் துறைக்கு இந்தியா முழுவதும் 1.5 இலட்சம் கிளைகள் உள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI governor Raghuram Rajan hints at bank licence for India Post

Reserve Bank of India governor Raghuram Rajan has backed the postal department's demand to set up a bank, even as the finance ministry has tried to block the move.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X