நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை மிஞ்சிய ஜெட் ஏர்வேஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த ஒரு வருட காலத்தில் சுமார் ரூ.4,129 கோடி நஷ்டம் அடைந்தாக, இந்நிறுவனம் தனது தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் எதிரெலியாக சந்தையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் 3 நாள் வர்த்தகதில் சுமார் 10.1 சதவீதம் சரிந்துள்ளது.

மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது லாப விகிதத்தை அதிகரிக்க 3ஆண்டு கால திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. இதன்படி நிறுவனம் செயல்பட்டால் இந்நிறுவனத்தின் லாப விகிதம் கண்டிப்பாக உயரும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெட் லைட் நிறுவனத்தின் எபக்ட்

ஜெட் லைட் நிறுவனத்தின் எபக்ட்

இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜெட் லைட் நிறுவனத்தில் அதிகப்படியான முதலீடு செய்திருப்பதாகவும், ஆனால் அது மக்களிடையே பெருமளவும் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் நிறுவனம் அதிகப்படியான நஷ்டத்தை தழுவியுள்ளது என எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

சீஇஓ விலகல்

சீஇஓ விலகல்

கடந்த ஜனவரி மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓவான கேரி கெனித் டூமி நிறுவனத்தில் சேர்ந்து 7 மாதங்களில், கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார். மேலும் இவரை தொடர்ந்து தற்போது விமான போக்குவரத்து நிபுணரான கார்மர் பால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சீஇஓவாக பதவி வகுக்கிறார்.

தொடர் நஷ்டங்கள்

தொடர் நஷ்டங்கள்

மார்ச் 31ஆம் நாள் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் அதிகப்படியான 2,153 கோடி ரூபாய் நஷ்டத்தை பதிவு செய்தது. மேலும் கடந்த வருடத்தின் மொத்த நஷ்டம் 4,129 கோடி ரூபாய் எட்டி நிறுவனம் தத்தளித்து வருகிறது. கடந்த 5 காலாண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது.

ஏரிவாயு விலை, டாலர் மதிப்பு

ஏரிவாயு விலை, டாலர் மதிப்பு

விமாந ஏரிவாயுவின் விலை 10.5 சதவீதம் அதிகரித்து 1 கிலோலிட்டர் ரூ.79,899 க்கு விற்கப்படுகிறது, இதனால் எரிபொருள் செலவில் 15.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததன் எதிரொலியாக நிறுவனத்தின் செலவீனம் ரூ.5,431 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவன பங்கு நிலை

நிறுவன பங்கு நிலை

இன்றைய வர்த்தக துவக்கும் முதல் ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் நிலை சரிய துவங்கியுள்ளது. இதனால் இந்நிறுவன பங்குகள் 6.40 சதவீதம் வரை சரிந்து 250.55 ரூபாய்க்கு இந்நிறுவன பங்குகள் விற்கப்படுகிறது. மேலும் கடந்த 3 நாட்களின் வர்த்தகத்தில் இந்நிறுவன பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways slips over 10% on largest ever annual loss of Rs 4129 crore

Jet Airways Ltd slipped as much as 10.1 per cent in trade on Wednesday, after the airliner posted its highest-ever annual loss of Rs 4,129 crore-forcing it to adopt tough measures to lower costs and achieve profitability with a three-year business plan.
Story first published: Wednesday, May 28, 2014, 12:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X