இந்திய மொபைல் சந்தையில் மீண்டும் நுழையும் பிலிப்ஸ்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய மொபைல் சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் விலகி போன பிலிப்ஸ் மொபைல் நிறுவனம், தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளது. புதன் கிழமையன்று நடந்த இந்நிறுவனத்தின் மொபைல் வெளியீட்டு விழாவில் இத்தகவலை பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்தது.

 

இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் ரூ.1,960 மற்றும் ரூ.20,650 என்ற விலைகளில் மூன்று ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு ப்யூச்சர் போன்களுடன் இந்திய சந்தையில் இறங்கியுள்ளது.

பிலிப்ஸ் மொபைல்

பிலிப்ஸ் மொபைல்

2000ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் ப்யூச்சர் போன்களை விற்று வந்த இந்நிறுவனம், டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் 6 இடங்களுக்குள் வருவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது. ஆனால் அடுத்த சில விருடங்களில் நோக்கிய, சாம்சாங், சோனி போன்ற நிறுவனங்கள் இந்நிறுவனத்திற்கு கடுமையான போட்டியை அளித்தது.

ஸ்மார்ட் போன் வகைகள்

ஸ்மார்ட் போன் வகைகள்

இந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்களான - W6610, W3500, W308 மற்றும் E130 ப்யூச்சர் போன் ஆகியவற்றைக் கொண்டு தொழில்நுட்பத்தை விரும்புபவர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் கவனத்தைப் பெற முயற்சி செய்கிறது.

இந்திய சந்தை
 

இந்திய சந்தை

'கடந்த சில மாதங்களாகவே, நாங்கள் எங்களுடைய விநியோக சங்கிலியை வலிமைப்படுத்தி உள்ளோம் மற்றும் இப்பொழுது இந்திய சந்தைக்காக தயாராக உள்ளோம். ஒரு ப்யூச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட் போன்கள் என 4 புதிய சாதனங்களை நாங்கள் அறிமுகப்படுத்தி மக்கலின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்ய உள்ளோம். அடுத்த சில மாதங்களில் மேலும் சில சாதனங்களை அறிமுகப்படுத்துவோம்,' ஷென்ஸன் சாங் பெய் கன்ஸ்யூமர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய மேலாளராக உள்ள S.S.பாஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

சைனா எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்

சைனா எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்

சைனா எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (CEC) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் சாங் பெய், இந்நிறுவனம் தான் 'பிலிப்ஸ்' நிறுவனத்தின் மொபைல்களை உலகளவில் விற்பதற்கான தனியுரிமையைப் பெற்றுள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியா ஒரு முக்கியமான சந்தை மற்றும் எங்கள் நிறுவனம் இந்நாட்டிற்குத் தேவையான மேலும் பல பொருட்களை கொண்டு வர உள்ளது, என்றும் திரு.பாஸ்ஸி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Philips re-enters Indian mobile market

Philips Mobile, on Wednesday, announced its comeback into the Indian mobile market with a new range of phones — three smartphones and a feature phone, priced between Rs.1, 960 and Rs.20,650.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X