ஜீ என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் 100% அன்னிய முதலீடு-ஆர்.பி.ஐ ஒப்புதல்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் முன்னணி தொலைகாட்சி நிறுவனமான ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) மூலம் இனி 100 சதவீதம் வரை முதலீடு செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிறுவனத்தில் முன்னதாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கான உச்சவரம்பு 49% ஆக இருந்தது குறிப்பிடதக்கது, ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டிற்கான உச்ச வரம்பை தளர்த்தி ரிசர்வ் வங்கி தற்போது 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜீ என்டெர்டெயிண்மென்ட்

ஜீ என்டெர்டெயிண்மென்ட்

'ஜீ என்டெர்டெயிண்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெய்ட்-அப் கேபிடலில், துறை முதலீட்டு திட்டத்தின் கீழ் 49 சதவீதத்திற்கு பதிலாக 100% அளவிற்கு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்' என்று அந்த அறிவிப்பை ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

பங்கு இருப்பு

பங்கு இருப்பு

மார்ச் 2014-ன் நிலைப்படி, நிறுவன பங்குகளில் இந்நிறுவனத்தினர் 43.07 சதவீத பங்குகளையும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 47.94 சதவீத பங்குகளையும் வைத்திருந்தாக மும்பை பங்குச் சந்தையின் புள்ளி விபரம் தெரவிக்கிறது.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

இந்நிறுவனத்தின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் அளவில் முன்மொழியை நிறைவேற்றியதாலும், இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஈகுவிட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க கடன் பத்திரங்களை வாங்கும் அளவை அதிகரிப்பதை ஒப்புக் கொண்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

என்.ஆர்.ஐ

என்.ஆர்.ஐ

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், குடியுரிமை இல்லாத இந்தியர்கள் (NRI) மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆகியேர் இந்தியாவிலுள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை முதலீட்டு சந்தைகளில் துறை வாரியான முதலீட்டு திட்டம் வழியாக முதலீடுகளை செய்ய முடியும்.

ஜீ சேனல்கள்

ஜீ சேனல்கள்

இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக ஜீ என்டர்டெயின்மெண்ட் உள்ளது. இந்நிறுவனத்தில் ஜீ டிவி, ஜீ சினிமா, ஜீ மியூசிக், ஜீ பிரிமியர், இடிசி, இடிசி பஞ்சாபி, டென் ஸ்போர்ட்ஸ், ஜீ ஸ்டுடியோ, ஜீ கிளாசிக் மற்றும் ஜீ ஸ்போர்ட்ஸ் ஆகிய புகழ்பெற்ற சேனல்களை இயக்கி வருகிறது உள்ளன.

பங்கு விலை

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்கின் விலை ரூ.273.15 என்ற அளவில் முந்தைய நாளை விட 2.10% உயர்ந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI allows up to 100% FII investment in Zee Entertainment

Foreign Institutional Investors (FIIs) can now invest up to 100 per cent of the paid up capital in Zee Entertainment Enterprises Ltd, an RBI notification said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X