விமான சேவையை துவக்க 20 விமானங்களை குத்தகைக்கு எடுத்த டாடா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் விமான சேவையை துவங்க டாடா சன்ஸ்-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது, மேலும் இதற்கான உரிம ஒப்புதலை பெறும் நிலையில் இக்கூட்டணி உள்ளது. இந்நிலையில் இக்கூட்டணி நிறுவனம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 20 ஏர்பஸ் விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.

 

மேலும் இக்கூட்டணி வரும் குளிர்காலத்தில் இந்தியவில் தனது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளதாக இந்நிறுவனம் தெரவித்துள்ளது.

20 ஏ-320 ரக விமானகள்

20 ஏ-320 ரக விமானகள்

டாடா நிறுவனம் 20 ஏ-320 ரக ஏர்பஸ்கள் குத்தகைக்கு எடுப்பதற்கான ஆணைகளை கொடுத்துள்ளதாக BOC ஏவியேசன் பிரைவேட் நிறுவனத்தின், முதலீட்டாளர்கள் தொடர்பு பிரிவின் தலைமை அதிகாரியான கிளேர் லியோ தெரிவித்தார்.

டாடாவின் ஏர்ஏசியா

டாடாவின் ஏர்ஏசியா

சில நாட்களுக்கு முன்பே டாடா சன்ஸ் - ஏர்ஏசியா கூட்டணியில் இந்தியாவில் மலிவு விலை விமான சேவை துவங்கியது. மேலும் தனது விமான இயக்கத்தை வரும ஜூன் 12ஆம் தேதி நடத்த உள்ளது. இந்நிலையில் டாடா சன்ஸ் மற்றோரு விமான நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

கூட்டணி
 

கூட்டணி

டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் 51:49 என் அளவில் கூட்டாக உருவாக்கியுள்ள ஃபுல்-சர்வீர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான இயக்க உரிமத்திற்கான (AOP or flying licence) விண்ணப்பத்தை ஏப்ரல் மாதத்தில் கோரியுள்ளது. விமான இயக்க உரிமம் கிடைத்தால் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள விமான போக்குவரத்து சேவைகளை எந்த விதமான குறையும் இன்றி இந்நிறுவனத்தால் வழங்க முடியும்.

ஏ-320

ஏ-320

A320 மற்றும் A320-200 (நியோ) வகை விமானங்களை இயக்கவுள்ள இந்நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் செயல்பாட்டை துவக்க முன்மொழிந்துள்ளது.

டெல்லி

டெல்லி

டெல்லியை மையமாகக் கொண்டு மும்பை, கோவா, பாட்னா, சண்டிகார், ஸ்ரீநகர், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு தன்னுடைய முதலாமாண்டில் விமானங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டம்

முதல் கட்டம்

முன்னதாக, ஒரு நாளைக்கு இரண்டு விமானங்களை மும்பைக்கு இயக்கவும், அதில் ஒன்று கோவா சென்று வரவேண்டும் என்று இந்நிறுவனம் திட்டமிட்டது. அதே போல, ஆரம்பத்தில் பெங்களூரு, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கும் இரண்டு விமானங்களை இயக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata-SIA airline to lease 20 A320 planes to launch flights

Start-up carrier Tata-SIA Airlines, which is yet to get a flying permit, will acquire at least 20 Airbus aircraft on lease from a Singapore—based firm to launch their operations in India by this winter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X