சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்- அமெரிக்கா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்திய எல்லையில் நமக்கு பல நாடுகளுடன் பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது சீனாவுடன் நடைபெற்று வரும் பிரச்சனை மிகவும் நூதனமானது. இந்நிலையில் பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியா பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் சீனாவின் பட்ஜெடில் மூன்றில் ஒரு பங்கு என தெரிவித்துள்ளது. எனவே இப்போது, இத்தகைய வலிமை மற்றும் பலம் பொருந்திய சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என கேள்வி எழுந்துள்ளது.

சீனா -இந்தியா

சீனா -இந்தியா

பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நிதியாண்டில் சீனா தனது பாதுகாப்பு துறைக்காக சுமார் 119.5 பில்லியன் டாலர் செலவிட பட்ஜெடை தயாரித்துள்ளது. இந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் வெறும் 39.2 பில்லியன் டாலரை மட்டுமே முன்னாள் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. (இதில் பாதுகாப்பு துறைக்கு செலவிட்ட தொகையின் கணக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்..)

ரஷ்ய பாதுகாப்பு துறை

ரஷ்ய பாதுகாப்பு துறை

இந்நேரத்தில் இந்தியாவிற்கு மறை முகமாகவோ, வெளிப்படையாகவோ ஆதரவு அளிக்கும் ரஷ்யா தனது பாதுகாப்பு துறைக்கு சுமார் 69.5 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவின் எதிரி
 

அமெரிக்காவின் எதிரி

உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் எதிரி நாடான ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் 56.9 பில்லியன் டாலர்.

சவுத் கொரியா

சவுத் கொரியா

கடந்த 2 இரண்டு வருடமாக போர் மூட்டத்தில் திளைத்திருக்கும் சவுத் கொரியா 2013ஆம் ஆண்டு 10.8 பில்லியன் டாலர் ஓதுக்கியுள்ளது.

போர் பதற்றம்

போர் பதற்றம்

கடந்த சில வருடங்களாக இந்திய-சீனா எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்தியா சீனாவை தக்க வகை எதிர்கொள்ள தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பென்டகன் கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்கா பட்ஜெட் என்ன??

அமெரிக்கா பட்ஜெட் என்ன??

இந்த அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க தனது பட்ஜெடை குறித்த எந்த ஒரு தகவல்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் உலகில் அனைத்து நாடுகளையும் ஒப்பிடுகையில் அமெரிக்கா அதிகளவில் தனது பாதுகாப்பு துறைக்கு செலவிட்டு வருகிறது என்பதே உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's defence budget is one third of China: Pentagon

India’s annual defence budget is just one-third of that of China despite the tensions that remain along their shared border, according to a Pentagon report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X