பணவீக்கம் கிடுகிடுவென உயர்ந்தது 6.01% எட்டியது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மொத்த விற்பனையை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் மே மாதம் தாறுமாறாக உயர்ந்து, 5 மாத உச்சமான 6.01 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

 

ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவீதமாக இருந்த இந்த மொத்த விற்பனைப் பணவீக்கம், கடந்த ஆண்டு மே மாதத்தில் 4.58 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. மேலும், மார்ச் 2013ல் 5.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், இந்த மார்ச் மாதத்தில் 6 சதவீதத்தைத் தொட்டது.

 
பணவீக்கம் கிடுகிடுவென உயர்ந்தது 6.01% எட்டியது!!

டீசல், பெட்ரோல்

எரிபொருள் சக்தியின் அடிப்படையிலான பணவீக்கமும் 10.53 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வந்த டீசல் விலை 14.21 சதவீத உயர்வைத் தொட்டுள்ளது தான் இதற்குக் காரணமாகும். பெட்ரோல் விலைகளும் 12.28 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.

உணவுப் பொருட்கள்

உணவுப் பணவீக்கமும் 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில், உருளைக் கிழங்கு விலைகள் 31.44 சதவீதமாகவும், பழங்களின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 19.40 சதவீதமாகவும், பால் விலை 9.57 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Inflation soars to 5-month high

India's wholesale price-based inflation rose to a five-month high of 6.01 per cent in May against 5.20 per cent in the previous month due to a sharp jump in food and fuel prices, government data showed on Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X