சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும் ஃபிளிப்கார்ட்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டில் உள்ள சிறு மற்றும் குறுதொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்க பிரபல ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் முன் வந்துள்ளது.

இந்திய சிறு மற்றும் குறுதொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (FISME) மற்றும் தேசிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மையம் (NCDPD) ஆகியவற்றுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் சிறு மற்றும் குறுதொழில் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு ஃபிளிப்கார்ட் அழைத்துச் செல்லவிருக்கிறது.

ஃபிளிப்கார்ட் பெஸ்ட்

ஃபிளிப்கார்ட் பெஸ்ட்

"எந்தப் பொருளானாலும் ஆன்லைன் மூலம் மார்க்கெட்டிங் செய்வதிலும் விற்பனை செய்வதிலும் ஃபிளிப்கார்ட் முன்னணியில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இதை நாங்கள் நிரூபித்துள்ளோம். இதையே நாங்கள் சிறுதொழில் துறைக்கும் செய்து, அவர்களை ஊக்குவிக்க போகிறோம்" என்று ஃபிளிப்கார்ட் மார்க்கெட்ப்ளேஸின் துணைத் தலைவர் அங்கிட் நகோரி கூறியுள்ளார்.

ஃபிளிப்கார்ட்டின் உதவி

ஃபிளிப்கார்ட்டின் உதவி

மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்களைப் பெறுதல் ஆகியவையே சிறுதொழில் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாகவே உள்ளன. இந்தப் பிரிவுகளில் தான் ஃபிளிப்கார்ட் உதவுவதற்கு முன் வந்துள்ளது.

50,000 நிறுவனங்களுக்கு...

50,000 நிறுவனங்களுக்கு...

இதன்மூலம், நாடு முழுவதிலும் உள்ள 50,000 சிறுதொழில் நிறுவனங்கள் பலன் பெறப் போவதாகவும், அவற்றின் தரமும் அடுத்தகட்டத்தை நோக்கிப் போகும் என்றும் நம்பப்படுகிறது.

பெண் தொழில் முனைவோருக்கு...

பெண் தொழில் முனைவோருக்கு...

மேலும், பெரும்பான்மையான பெண் தொழில் முனைவோருக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சில்லறை வர்த்தக துறையில் பெண் தொழில் முனைவோர்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்

கிராமப் பொருளாதார வளர்ச்சி

கிராமப் பொருளாதார வளர்ச்சி

இத்தகைய திட்டங்களால் கிராமப் பொருளாதாரமும் நன்கு முன்னேறும். மேலும், இந்தியத் தொழில் வளர்ச்சியில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல் கல்லாகவே அமையும் என ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart signs MoU to help MSMEs scale their business

Online marketplace Flipkart on Wednesday has signed a memorandum of understanding with Federation of Indian Micro and Small and Medium Enterprises (FISME) and National Center for Design and Product Development (NCDPD) to boost manufacturing and entrepreneurship in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X